போயஸ் கார்டனில் வீடு கட்டும் தனுஷ்.. பூமி பூஜையில் பங்கேற்ற ரஜினி.. தீயாய் பரவும் போட்டோஸ்!
சென்னை: நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டின் அருகே வீடு கட்டுகிறார்.
Recommended Video
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தனுஷ். தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்டுள்ளார்.
எந்த மாதிரியான கதாப்பாத்திரம் என்றாலும் பட்டையை கிளப்பி வருகிறார் தனுஷ். அண்மையில் அவரது நடிப்பில் வெளியான அசுரன் படம் பெரும் வரவேற்பை பெற்றது.

அசுரனுக்கு பாராட்டு
அசுரன் படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்து ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறை பிரபலங்கள் பலரும் பாராட்டினர். தற்போது நடிகர் தனுஷ் ஜகமே தந்திரம், கர்ணன், அந்த்ரங்கி ரே, டி43 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

ஐஸ்வர்யாவுடன் திருமணம்
இதில் ஜகமே தந்திரம் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. கர்ணன் படத்தின் போஸ்ட் புரெடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2004ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார் தனுஷ்.

இன்று பூமி பூஜை
அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகர் தனுஷ், போயஸ் கார்டனில் வீடு கட்டுகிறார். ஜெயலலிதாவின் வீட்டின் அருகே அவர் கட்டும் வீட்டிற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

ரஜினிகாந்த் பங்கேற்பு
இதில் நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த் உட்பட குடும்பத்தினர் பங்கேற்றனர். தனுஷ் வீட்டின் பூமி பூஜை நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஓய்வில் இருந்த ரஜினி
நடிகர் ரஜினிகாந்த், ஹைதராபாத்தில் நடைபெற்ற அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று சென்னை திரும்பிய அவர் தொடர்ந்து ஒய்வில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











