தம்பி சினிமாவுக்கு வந்து 18 வருஷம் ஆச்சு.. ஹேப்பியா டிபி வெளியிட்ட அண்ணன்! #18YrsOfKTownPrideDHANUSH
சென்னை: நடிகர் தனுஷ் சினிமாத்துறைக்கு வந்து 18 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு அவரது அண்ணனும் இயருக்குநருமான செல்வராகவன் காமன் டிபியை ரிலீஸ் செய்துள்ளார்.
நடிகர் தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தில் முதன் முதலாக நடித்தார். தனுஷ் பள்ளி மாணவராக நடித்த அந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது.
துள்ளுவதோ இளமைப் படத்தில் மகேஷ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் தனுஷ்.. அவருக்கு ஜோடியாக ஷெரின் லீடிங் ரோலில் நடித்திருப்பார்.

18 வருடங்கள்
இந்தப் படம் கடந்த 2002ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் தேதி வெளியானது. இதனை தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்துள்ள நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், பாடகர், பாடலசிரியர் என பலமுகங்களை கொண்டவராக உள்ளார் தனுஷ்.

காமன் டிபி
இந்நிலையில் நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் கால் பதித்து 18 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு அவரது அண்ணனும் இயக்குநருமான செல்வராகவன் காமன் டிபியை ரிலீஸ் செய்துள்ளார். அதில் தனுஷ் இதுவரை நடித்த கதாப்பாத்திரங்களின் படங்கள் இடம் பெற்றுள்ளன.

ட்ரென்டிங்
இதனை தொடர்ந்து #18YrsOfKTownPrideDHANUSH என்ற ஹேஷ்டேக்கை தனுஷின் ரசிகர்கள் ட்ரென்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் சென்னை ட்ரென்டிங்கில் டாப்பில் உள்ளது. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் நடிகர் தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அஜித் ரசிகர்கள்
அஜித் ரசிகர்களும் தனுஷ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதில் சினிமாத் துறையில் 18 ஆண்டுகள் நிறைவு செய்வதற்கு வாழ்த்துகள்.. கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரையிலான பயணம்.. கீப் ராக்கிங்... அஜித் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகள்.. என தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











