பராசக்தி மூலமாக பாமரர்களுக்கு சினிமா கதவை எட்டி உதைத்து திறந்து வைத்த கலைஞரே: தனுஷ் உருக்கம்
Recommended Video

சென்னை: என்னைப் போன்றவர்களுக்கு தமிழ்த் திரைத்துறையின் கதவை எட்டி உதைத்து திறந்து வைத்தவர் கருணாநிதி என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
மறைந்த திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு நேரிலும், சமூகவலைதளங்கள் வாயிலாகவும் அரசியல் தலைவர்கள், திரைத் துறையினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் தனுஷ் டிவிட்டர் பதிவு மூலம் கருணாநிதியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வஞ்சிக்கப்பட்ட தமிழனை,சுயமரியாதை சூரியனால் சுட்டெரித்து புடம் போட்ட தங்கமாக மாற்றிய கலைச்சூரியனே! பராசக்தி மூலமாக அரசியல் அறியவைத்து , எங்களைப்போன்ற பாமர்களுக்கும் திரைத்துறையின் கதவை எட்டி உதைத்து திறந்து வைத்த கலைஞரே! உங்களை கண்ணீரோடு வழியனுப்பி வணங்குகின்றோம்!" என தனுஷ் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











