Actor Dhanush: கமல்ஹாசனையே.. திகைக்க வைத்த தனுஷ்!

சென்னை: நடிகர் சிம்புவைப்பத்தி பேசியாச்சு... தனுஷைப் பற்றி பேசாமல் இருந்தால் எப்படி? வளர்த்துவிட்டது குடும்பம் என்றாலும், தனிப்பட்ட முறையிலும் தன்னைத்தானே வளர்த்துக் கொண்டவர் தனுஷ்.

வைரம் என்று கண்டெடுத்தவர் அப்பா, அண்ணன் என்றால், தானே தன்னைபட்டைத் தீட்டிக் கொண்டவர் தனுஷ். ஒல்லியான உடல்வாகு, கத்தும் குரல் என்றுதான் புதுப்பேட்டை வரை கோலோச்சி வந்தார்.

அதிலும் தனுஷ் நடித்த சுள்ளான் படம் இருக்கிறதே...கடவுளே..இதில் வேறொரு நடிகர் நடித்திருந்தால் இந்நேரம் காணாமல் போயிருப்பார். தன்னைத்தானே பட்டைத் தீட்டிக்கொண்டு ஜொலிக்க ஆரம்பித்த காரணம் அவரது முயற்சியா, இல்லை பெற்றோர் அண்ணன் கொடுத்த உந்துதலா என்று தெரியவில்லை.

இளமையே இல்லை

இளமையே இல்லை

தனுஷ் நடித்த முதல் படம் துள்ளுவதோ இளமை.சாத்தியமா தனுஷிடம் அப்போது இளமையே இல்லை.அவருடன் நடித்த நடிகை ஷெரீனிடம் இளமை துள்ளி விளையாடியது. இந்த படத்திற்குப் பிறகும் தனுஷை நம்பி அண்ணன் படம் எடுத்தார் என்றால்,அது துள்ளுவதோ இளமையில் யுவன் ஷங்கர் ராஜா கொடுத்த ஹிட் பாடல்கள், பின்னணி இசை இதுதான் காரணம்.

இயக்குநர் இசை நடிகன்

இயக்குநர் இசை நடிகன்

அடுத்து காதல் கொண்டேன் படமும் சூப்பர் ஹிட்.சும்மா சொல்லக் கூடாது..இந்த படத்திலும் தனுஷ் ஒல்லிக் குச்சி நாயகன்தான்.கரமுற குரலில் கத்தி பேசியவர்தான்.ஆனால், நடிப்பு பிரமாதம் எனும் அளவுக்கு பேச வச்சுட்டார். இந்த படத்துக்கும் வலு சேர்த்தது செல்வ ராகவனின் வித்தியாசமான கதையும், யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புத இசையும்தான், பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்..

கமல்ஹாசன் சொன்னது

கமல்ஹாசன் சொன்னது

காதல் கொண்டேன் படத்தை பார்த்த கமல், செல்வ ராகவன் படத்த்தில் வச்சு இருந்த ஒரு காட்சியைப் பார்த்து மிரண்டு போயிட்டதாக சொன்னார். அதாவது காட்டில் தனுஷுடன் மாட்டிக்கொண்ட சோனியா அகர்வால் நீரோடையில் குளிக்கும்போது, வரும் பாடலில் தனுஷின் நெஞ்சில் எட்டி ஒரு உதை விடுவார் சோனியா. அடடே.. குணா படத்தில் நமக்கு இது தோணாமப் போச்சேன்னு நினைச்சாராம்.

புது தனுஷ்

புது தனுஷ்

புதுப்பேட்டை படத்தில் இருந்த டிசைன் தனுஷ்தான் என்றாலும், ரொம்பவே நடிப்பில் அசத்தி இருந்தார்.தன்னுள் இருக்கும் இன்னொரு பரிமாணத்தை வெளியில் கொண்டு வர ஆரம்பித்த தருணம் அங்குதான் ஆரம்பித்தது. அடுத்து அடுத்து, அவர் ஆட்டம்.. அதற்கு வெற்றிமாறன் வழி வகுத்தார்.

தனுஷின் பொல்லாதவன்

தனுஷின் பொல்லாதவன்

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷின் பொல்லாதவன் படத்தில், பாடல்களில் தனுஷின் ஸ்டைலிஷ் பார்க்க முடிந்தது.ஒல்லியாக இருந்தாலும்பையன் நன்றாக இருக்கிறானே என்று இளசுகள் ரசிக்க ஆரம்பித்தார்கள். அடுத்து வட சென்னை,ஆடுகளம் என்று இவரிடம் இருந்து இயக்குநர்கள் பல்வேறு பரிமாணங்களை கண்டறிந்து வெளிக்கொண்டு வந்தார்கள்.

சான்ஸே இல்லை

சான்ஸே இல்லை

இதில் மகுடம் வைத்தது போன்ற நடிப்பு அவரிடம் இருந்து வெளிப்பட்டது என்றால் அது ஆடுகளம் படம்தான்.அதில் மதுரை பாஷையை கொஞ்சமும் பிசகாமல் பேசி இருப்பார், கத்தல் இல்லை, பேஸ் வாய்ஸ் என்று அமர்க்களம் பண்ணி இருப்பார்.குறிப்பாக சேவலுடன் இவர் பேசும் வசனம் தனுஷின் அருமையான டப்பிங்.

ஸ்டைல் மாமனார் .

ஸ்டைல் மாமனார் .

தனுஷுக்கு என்னவோ எப்படியோ தெரியவில்லை கொஞ்சம் மாமனாரின் சாயலும் ஒட்டிக்கொண்டு, நடிப்பில் ,நடக்கையில் வேகம் அதிகரிப்பது, பேச்சு அந்த தொனியில் இருப்பது என்று அதகளம் பண்ணுகிறார் இந்த சூப்பர் ஸ்டார் மருமகன். இன்றைய பொழுது எப்படி என்று மட்டும் நினைக்கும் முதிர்ச்சி அடைந்த மனது உண்மையில் இவருக்கு கிடைத்த வரம்.

தனுஷ் இல்லை

தனுஷ் இல்லை

இன்னிக்கு தனுஷ் உங்க முன்னாடி நிக்க இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாதான் காரணம்.யுவன் இல்லை என்றால்,தனுஷ் இல்லை என்று கூட சமீபத்தில் தனுஷ் ட்வீட் பண்ணி இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X