Dhanush: அட வேலையில்லா பட்டதாரி படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆயிடுச்சா.. தனுஷ் உற்சாகப்பதிவு!

சென்னை: நடிகர் தனுஷ் -அமலாபால் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2014ம் ஆண்டு திரையரங்குகளில் ரிலீசான வேலையில்லா பட்டதாரி படம் வெளியாகி இன்றைய தினம் 10 ஆண்டுகளை கடந்துள்ளது. தனுஷின் 50வது படமான ராயன் படம் வரும் 26ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படம் அவரது இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியான தனுஷின் வேலையில்லா பட்டதாரி படம் அவரது 25வது படம். பத்து ஆண்டுகளில் 25 படங்களை நிறைவு செய்துள்ளார் தனுஷ். இந்த விஷயம் அவரது ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கொண்டாட்டத்திற்கு உள்ளாக்கி உள்ளது. ரசிகர்கள் மட்டுமில்லாமல் தனுஷும் எக்ஸ் தள பக்கத்தில் விஐபி படத்தின் 10 ஆண்டு கொண்டாட்டத்தையொட்டிய உற்சாகப்பதிவை வெளியிட்டுள்ளார்.

Dhanush Raayan tamil cinema

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஹாலிவுட் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தன்னை ஒரு குறுகிய வட்டத்திற்குள் சிக்க வைத்துக் கொள்ளாமல் பலதரப்பட்ட கதைகளை இவர் ரசிகர்களின் நாடித் தொகுப்பை சிறப்பாக உணர்ந்து கொடுத்து வருகிறார். தற்போது தனுஷின் 50வது படமான ராயன் வரும் 26ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் தனுஷ் நடிப்பில் 25வது படமாக கடந்த 2014ம் ஆண்டில் வெளியான வேலையில்லா பட்டதாரி படம் ரிலீசாகி பத்து ஆண்டுகளை கடந்துள்ளது. வேல்ராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் மிகச் சிறப்பான வெற்றியை தனுஷிற்கு கொடுத்தது.

வேலையில்லா பட்டதாரி படம்: அந்த வகையில் வேலையில்லா பட்டதாரி படம் வெளியாகி 10 ஆண்டு கொண்டாட்டத்தை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் தனுஷ் இன்றைய தினம் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் படத்தின் சிறப்பான போஸ்டர் ஒன்றையும் இணைத்துள்ளார். அவர் மட்டுமில்லாமல் இணையதளத்தில் ரசிகர்களும் 10 ஆண்டு வேலையில்லா பட்டதாரி படத்தின் கொண்டாட்டத்தை கொண்டாடி வருகின்றனர். இந்தப் படத்தில் நடிகர் தனுஷுடன் அமலா பால், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, விவேக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தன்னுடைய விருப்பத்திற்குரிய கேரியரில் கால்பதிக்க துடிக்கும் இளைஞரை இந்தப் படத்தில் கண்முன்னே கொண்டு வந்திருந்தார் தனுஷ்.

வேலையில்லாத இளைஞன்: வேலையில்லாமல் வீட்டில் இருக்கும் பட்டதாரி இளைஞன் வீட்டிலும் வெளியிடத்திலும் படும் அவமானங்களையும் இந்தப் படத்தில் இயக்குநர் வேல்ராஜ் பதிவு செய்திருந்தார். அந்த வகையில் வேலை கிடைத்தாலும் அதையும் கெடுக்க முயலும் ஆதிக்க வர்க்கத்தையும் இந்தப்படத்தில் காண முடிந்தது. வில்லனாக நடித்திருந்த அந்த பணக்கார இளைஞனை அமுல்பேபி என்று தனுஷ் கூப்பிட்டதை ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர். படத்தில் ரகுவரன் என்ற கேரக்டரில் தனுஷின் சிறப்பான நடிப்பு வெளிப்பட்டிருந்தது.

10 ஆண்டுகளில் 25 படங்கள்: குறிப்பாக இந்தப் படத்தில் அம்மா சென்டிமெண்ட் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. படத்தின் அம்மா அம்மா பாடல் எவர்கிரீன் அம்மா பாடலாக தற்போதும் ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறது. தனுஷ் -அமலா பால் கெமிஸ்ட்ரியும் இந்தப் படத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தின் 10 ஆண்டு நிறைவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். தற்காலங்களில் தனுஷின் படங்கள் எளிதாக 100 கோடி கிளப்பில் இணைந்து வருகின்றன. ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்பு வேலையில்லா பட்டதாரி படம் 60 முதல் 65 கோடிகளை வசூலித்திருந்தது. தனுஷ் கேரியரில் இந்தப் படம் அதிகமாக வசூலித்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X