மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் தனுஷ்.. தூசி தட்டப்படும் நான் ருத்ரன் படம்!

சென்னை : நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்கள் வெளியாகியுள்ளன.

இதில் திருச்சிற்றம்பலம் படத்திற்கு நல்ல விமர்சனங்களும் நானே வருவேன் படத்திற்கு கலவையான விமர்சனங்களும் கிடைத்துள்ளது.

நானே வருவேன் படத்தை இயக்குநர் செல்வராகவன் இயக்கியுள்ள நிலையில் படத்தின் கதை, திரைக்கதையை தனுஷ் எழுதியிருந்தார்.

 நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ், சிறந்த நடிகராக கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை தன்னுடைய திறமையை நிரூபித்துள்ளவர். சமீபத்தில் இவரது நடிப்பில் தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படம் வெளியாகி தனுஷின் நடிப்பு பாராட்டுக்களை பெற்றது. முன்னதாக கோலிவுட்டில் ஜகமே தந்திரம், மாறன் போன்ற படங்களும், பாலிவுட்டில் அட்ராங்கி ரே படமும் வெளியானது.

திருச்சிற்றம்பலம் படம்

திருச்சிற்றம்பலம் படம்

இதையடுத்து தனுஷின் நடிப்பில் சன் பிக்சர்ஸ் இயக்கத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து இந்தப் படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான நானே வருவேன் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

நானே வருவேன் படம்

நானே வருவேன் படம்

செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் பிரபு மற்றும் கதிர் என்ற கேரக்டர்களில் தனுஷ் நடித்திருந்தார். இதில் கதிர் கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்தின் கதை மற்றும் திரைக்கதையை நடிகர் தனுஷ் எழுதியிருந்தார்.

மீண்டும் நான் ருத்ரன் படம்?

மீண்டும் நான் ருத்ரன் படம்?

இதனிடையே கதிர் போன்ற கேரக்டர்களில் நடிகர் தனுஷ் நடிக்க வேண்டுமென்றும் விரைவில் ப பாண்டி போன்று மீண்டும் படத்தை இயக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையொட்டி நடிகர் தனுஷ் இயக்கத்தில் சூட்டிங் துவங்கப்பட்டு பாதியில் நின்றுபோன நான் ருத்ரன் படத்தின் சூட்டிங் மீண்டும் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பீரியட் படம்

பீரியட் படம்

சுதந்திர காலகட்டத்திற்கு முந்தைய கதைக்களத்தை மையமாக கொண்ட இந்தப் படத்தில் நாகர்ஜுனா, அதிதி ராவ் ஹைதாரி, எஸ்ஜே சூர்யா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் கமிட்டாகி இருந்தனர். படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு முதல் பாதியின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது.

ஏறக்குறைய நிறைவடைந்த முதல் பாதி

ஏறக்குறைய நிறைவடைந்த முதல் பாதி

படத்தின் 35 நாட்கள் சூட்டிங் நடத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இந்தப் படத்தின் சூட்டிங்கை துவக்க தனுஷ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து நான் ருத்ரன் படத்தை அவர் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X