தனுஷ்50 படத்திற்காக தயாராகும் படக்குழு.. பிரம்மாண்டமாக போடப்படும் ராயபுரம் செட்!
சென்னை : நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
வரும் 17ம் தேதி தனுஷின் வாத்தி படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.
இதனிடையே தனது டி50 படத்திற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் தனுஷ் அடுத்ததாக இணைந்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் கோலிவுட்டில் மட்டுமே தன்னுடைய எல்லைகளை குறுக்கிக் கொள்ளாமல், பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது புதிய முயற்சியாக டோலிவுட்டிலும் தனது சார் படம் மூலம் களமிறங்கவுள்ளார். இவரது அடுத்தடுத்த படங்களில் குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ந்து ரிலீசானவண்ணம் உள்ளது.

பாய் நெக்ஸ்ட் டோர் லுக்
தன்னுடைய இயல்பான பாய் டெக்ஸ்ட் டோர் லுக் மூலம் அதிகமான ரசிகர்களை கோலிவுட்டில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் வைத்துள்ளார் தனுஷ். அதனால்தான் இவரால் தொடர்ந்து பாலிவுட் படங்களிலும் முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து நடிக்க முடிகிறது. இவரது நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான மாறன், திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் படங்கள் ரசிகர்களை கவர்ந்தது.

திருச்சிற்றம்பலம் படம்
குறிப்பாக நித்யா மேனனுடன் ஜோடி சேர்ந்து தனுஷ் நடித்திருந்த திருச்சிற்றம்பலம் சிறப்பான வெற்றியை தயாரிப்பாளருக்கு கொடுத்துள்ளது. இந்நிலையில் இதே கூட்டணி தற்போது மீண்டும் டி50 படத்திலும் இணையவுள்ளது. அடுத்ததாக தனுஷின் வாத்தி படம் வரும் 17ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாகவுள்ளது.

கேப்டன் மில்லர் சூட்டிங்கில் தனுஷ்
இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்தப் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங்கை வரும் மார்ச் மாதத்தில் நிறைவு செய்யவுள்ள தனுஷ், அடுத்ததாக தன்னுடைய டி50 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார்.

முன் தயாரிப்பு பணிகள்
இந்தப் படத்தை தனுஷ் இயக்கி நடிக்கவுள்ள நிலையில், ஒரு மாத காலம் இந்தப் படத்தின் முன் தயாரிப்பிற்காக நேரம் ஒதுக்கும் தனுஷ், மே மாதத்தில் படத்தின் படப்பிடிப்பை துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் விஷ்ணு விஷால், எஸ்ஜே சூர்யா முக்கியமான கேரக்டர்களில் நடிக்கவுள்ளதாகவும் முன்னதாக கூறப்பட்டுள்ளது.

ராயபுரம் செட்
இதனிடையே இந்தப் படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளில் பெரிய அளவிலான ராயபுரம் செட் போடப்பட்டு சூட்டிங் நடத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனுஷ் தன்னை சிறப்பான இயக்குநராகவும் நிரூபித்துள்ள நிலையில் டி50 படமும் அவருக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











