Dhanush: மீண்டும் அடுத்தப்படத்தை இயக்கும் தனுஷ்.. யார் தயாரிப்பு தெரியுமா?
சென்னை: நடிகர் தனுஷ் ப பாண்டி படத்தை தொடர்ந்து தற்போது டி50 படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட இடங்களில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு நடந்து வருகிறது.
இந்தப் படத்தின் சூட்டிங் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் இணையவுள்ளார்.
தமிழ், தெலுங்கில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் தனுஷிற்கு ஜோடியாகியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. அடுத்த ஆண்டில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்த படங்களில் சிறப்பாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியான திருச்சிற்றம்பலம், வாத்தி படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூல்மழையும் பொழிந்தன. இந்நிலையில் அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் இந்த ஆண்டிலேயே டிசம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேப்டன் மில்லர் படம்: படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்தப் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துள்ள தனுஷ் அடுத்ததாக தன்னுடைய நடிப்பு மற்றும் இயக்கத்தில் டி50 படத்தை உருவாக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வித்தியாசமான கெட்டப்பில் தனுஷ்: இந்தப் படத்தின் சூட்டிங் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் தனுஷ் கேங்ஸ்டராக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா, அபர்ணா முரளி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். ப பாண்டி படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கத்தில் இரண்டாவது படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் தனுஷ் நடித்து வருகிறார்.
தனுஷின் அடுத்தடுத்த கமிட்மெண்ட்கள்: இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில் அடுத்ததாக சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் தனது டி52 படத்தில் இணையவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் உருவாகவுள்ளது. படத்தில் ராஷ்மிகா மந்தனா தனுஷிற்கு ஜோடியாக கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து பாலிவுட் படம் ஒன்றிலும் நடிக்க தனுஷ் கமிட்டாகியுள்ளார். தனுஷின் அடுத்தடுத்த கமிட்மெண்ட்கள் அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
மீண்டும் படமியக்கும் தனுஷ்: இதனிடையே தனுஷ் மீண்டும் புதிய படத்தை இயக்கவுள்ளதாகவும் இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டில் தவங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனுஷ் இயக்கத்தில் 3வது படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தில் தனுஷின் உறவினர் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் தனுஷ் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ள நிலையில் விரைவில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











