தெலுங்கிலும் வாத்தி படத்திற்கு பின்னணி கொடுக்கும் தனுஷ்.. இன்னும் என்னென்ன வித்தை வச்சிருக்காரோ!

சென்னை : நடிகர் தனுஷின் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் சிறப்பான வசூலை பெற்றுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து அவரது சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படம் வரும் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனிடையே தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கில் இருமொழிப் படமாக உருவாகியுள்ள வாத்தி படமும் டிசம்பரில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்து வருகிறார். இவரது 4 படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் வெளியான நிலையில், சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருந்த திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

திருச்சிற்றம்பலம் படம்

திருச்சிற்றம்பலம் படம்

இந்தப் படம் திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்தப் படத்தில் தனுஷுடன் நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்திருந்தனர். மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சிறப்பான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளால் இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்தது.

நானே வருவேன் ரிலீஸ்

நானே வருவேன் ரிலீஸ்

இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷின் அடுத்தடுத்த படங்களான நானே வருவேன் மற்றும் வாத்தி படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷின் சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள நானே வருவேன் படம் இந்த மாதம் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இரட்டை வேடங்கள்

இரட்டை வேடங்கள்

நானே வருவேன் படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என இரட்டை வேடங்களில் தனுஷ் நடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. படத்திற்கான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளன. படம் ரிலீசாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் படத்தின் பிரமோஷனை இன்னும் துவக்காமல் உள்ளது படக்குழு.

வாத்தி படத்தின் ரிலீஸ்

வாத்தி படத்தின் ரிலீஸ்

இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷ், தமிழ், தெலுங்கில் நடித்துள்ள வாத்தி படமும் திரையரங்குகளில் வரும் டிசம்பர் 2ம் தேதி ரிலீசாக உள்ளது. படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார். கல்வியை மையமாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளது.

தெலுங்கில் அறிமுகம்

தெலுங்கில் அறிமுகம்

இந்தப் படத்தின் மூலம் முதல்முறையாக தெலுங்கிலும் அறிமுகமாகவுள்ளார் தனுஷ். முதல் படமாக இருந்தாலும் இந்தப் படத்திற்கு தனுஷ் தானே டப்பிங் செய்யவுள்ளார். இந்தப் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் அவருக்கு எந்த மாதிரியான வரவேற்பு கிடைக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X