Dhanush: மீண்டும் தெலுங்குப்பட இயக்குநருடன் ஜாய்ன் ஆகும் தனுஷ்.. ஹீரோயின் யார் தெரியுமா?
சென்னை: நடிகர் தனுஷ் அடுத்தடுத்து முன்னணி பட இயக்குனர்களுடன் கைகோர்த்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்திருந்தார் தனுஷ். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியானது. இந்நிலையில் தற்போது மீண்டும் தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் முன்னணி தெலுங்கு பட இயக்குனர் இயக்கத்தில் தனுஷ் இணைய உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து படங்களை கமிட் செய்து வருகிறார். தற்போது பிரபல தெலுங்குப்பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மும்பை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் இந்த படத்தின் சூட்டிங் தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். முன்னதாக தனுஷின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகார்ஜுனாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது,
தெலுங்குப்பட இயக்குநருடன் தனுஷ்?: அடுத்ததாக ராஷ்மிகா மந்தனாவின் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு வெங்கி அட்லுரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்திருந்தார் தனுஷ். தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லுரியின் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது மீண்டும் தெலுங்கு பட இயக்குனருடன் குபேரா படத்தில் இணைந்துள்ளார் தனுஷ். இந்த படம் இந்த ஆண்டிலேயே ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் தெலுங்கு பட இயக்குனர் கிஷோர் பி இயக்கத்தில் தனுஷ் இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தில் ராஜு தயாரிப்பு: இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டில் ஷர்வானந்த் லீட் கேரக்டரில் நடித்து வெளியான ஸ்ரீகாரம் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்தது, இந்நிலையில் கிஷோர் பி இயக்கத்தில் அடுத்ததாக தனுஷ் இணையவுள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படமும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீலீலா நாயகி?: இந்தப் படத்தில் நடிகை ஸ்ரீலீலா தனுஷிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக பேட்டியொன்றில் தனுஷுடன் இணைந்து நடிக்கும் தன்னுடைய ஆர்வத்தை ஸ்ரீலீலா வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் அவரது ஆசை நிறைவேறும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக தனுஷ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள ராயன் படம் ஜூன் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இந்தப் படத்தின் ரிலீஸ் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் ரிலீஸ் அறிவிப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











