Sudha kongara: புறநானூறு படத்தைதான் எடுப்பேன்.. அடம்பிடிக்கும் சுதா கொங்கரா.. ஹீரோ இவரா?
சென்னை: நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் சுதா கொங்கரா கூட்டணி, முன்னதாக சூரரைப் போற்று படம் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தனர். ஓடிடியில் இந்த படம் வெளியான நிலையில் ஏராளமான தேசிய விருதுகளை அள்ளியது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக பாலிவுட்டில் இந்த படத்தின் ரீமேக்கை இயக்கி முடித்துள்ளார் சுதா கொங்கரா.
தொடர்ந்து சூர்யா மற்றும் சுதா கொங்கரா கூட்டணியில் சூர்யா 43 படம் உருவாக விருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் படம் தற்போது கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக சுதா கொங்கரா, புறநானூறு படத்தை தான் இயக்க உள்ளதாகவும் அதில் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் சூர்யா 43 படத்தை இயக்கவிருந்தார் இயக்குனர் சுதா கொங்கரா. சூரரை போற்று படத்தில் இந்தக் கூட்டணி இணைந்து மிகப்பெரிய மாஸ் ஹிட் கொடுத்தது. இந்த படம் ஓடிடியில் வெளியான போதிலும் படம் திரையரங்குகளில் வெளியிடப்படுவதற்கான அனைத்து அம்சங்களுடன் காணப்படுவதாக ரசிகர்கள் முன்னதாக பாராட்டு தெரிவித்திருந்தனர். இந்த படம் தேசிய விருதுகளையும் குவித்த நிலையில் தற்போது இந்த படத்தின் இந்தி ரீமேக்கையும் சுதா கொங்கரா இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா -சூர்யா கூட்டணியில் சூர்யா 43 படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
புறநானூறு படம்: இந்த படத்திற்கு புறநானூறு என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட நிலையில் இந்த படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளதாக படக்குழு அப்டேட் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த படத்தை நடிகர் சூர்யா, டிராப் செய்ததாக கூறப்பட்டுள்ளது. தன்னுடைய சொந்த தயாரிப்பில் இந்த படத்தை உருவாக்க அவர் திட்டமிட்டிருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் இந்த படத்தை முன்னெடுக்க முடியாமல் போய் உள்ளது. இதன் காரணமாக இயக்குனர் சுதா கொங்கரா தொடர்ந்து வருத்தத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சூர்யா 43 படத்திற்காக போடப்பட்ட திட்டங்கள் சரியாக நடந்திருந்தால் இந்நேரம் படத்தின் இரண்டு செட்யூல்கள் நிறைவடைந்திருக்கும்.
சூர்யா 44 படத்தில் சூர்யா: இந்நிலையில் தற்போது கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து சூர்யா 44 படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் அந்தமானில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே இணைந்துள்ளார். படத்தின் சூட்டிங் விரைவில் அங்கு நிறைவடையவுள்ளதாகவும் அடுத்த கட்ட சூட்டிங்கிற்காக படக் குழுவினர் உதகைக்கு செல்ல உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கில் சூர்யா தாமதமாக பங்கேற்று வருவதாகவும் தினந்தோறும் ஜிம்மிற்கு சென்று தன்னுடைய பிட்னசை அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சுதா கொங்கராவுடன் இணையும் தனுஷ்?: இதனிடையே அவர் சுதா கொங்கராவுடன் தொலைபேசியில் பேசியதாகவும் புறநானூறு படத்தை விட்டுவிட்டு அடுத்த ப்ராஜெக்ட்டில் இணையலாம் என்றும் அதற்கான ஸ்கிரிப்ட்டை தயார் செய்யுமாறும் சூர்யா கேட்டு கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் சூர்யாவின் இந்த ப்ராஜெக்ட்டிற்கு சுதா கொங்கரா நோ சொன்னதாகவும் தான் அடுத்ததாக புறநானூறு படத்தை தான் இயக்க உள்ளதாக அவர் உறுதியுடன் சூர்யாவிடம் பேசி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன், சிம்பு உள்ளிட்ட நடிகர்களுடன் அடுத்ததாக சுதா கொங்கரா இணையவுள்ளதாகவும் அது புறநானூறு சப்ஜெக்டாக தான் இருக்கும் என்றும் முன்னதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகர் தனுஷ் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தனுஷ் ஆர்வம்: முன்னதாக வாடிவாசல் படத்தில் சூர்யா விலக உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அந்த படத்திலும் நடிக்க தனுஷ் ஆர்வம் காட்டினார். இந்நிலையில் தற்போது சுதா கொங்கராவின் புறநானூறு படத்தில் நடிக்க அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வித்தியாசமான கதைக்களங்களில் வித்தியாசமான இயக்குனர்களுடன் இணைந்து தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை கொடுத்து வருகிறார் தனுஷ். அந்த வகையில் சுதா கொங்கராவுடன் தனுஷ் இணையவுள்ளதாக கூறப்படும் புறநானூறு படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications