Actor Dhanush: அடுத்தப்பட டைரக்ஷனை துவங்கும் தனுஷ்.. அடுத்த வாரத்தில் சூட்டிங்!
சென்னை: நடிகர் தனுஷ் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என பறந்து பறந்து நடித்து வருபவர்.
இந்த மனிதருக்கு மட்டும் எப்படி இவ்வளவு நேரம் கிடைக்கிறது என்று ரசிகர்கள் கேள்வி கேட்கும் வகையில் அடுத்தடுத்த படங்களை கொடுத்து வருகிறார்.

நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகம் காட்டி வருகிறார் தனுஷ்.
நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் நடிகராக மாஸ் காட்டி வருகிறார். அடுத்தடுத்த வித்தியாசமான முயற்சிகளுக்கு மட்டுமில்லாமல் கமர்ஷியல் படங்களுக்கும் கைக்கொடுத்து வருகிறார். அடுத்த வீட்டு பையன் லுக்கில் ரசிகர்களை கவர்ந்துவரும் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து திருச்சிற்றம்பலம், வாத்தி என வெற்றிப்படங்கள் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்நிலையில் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார்.
கேப்டன் மில்லர் படம்: கேப்டன் மில்லர் படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் ரிலீசாகவுள்ள நிலையில் அடுத்ததாக தன்னுடைய இயக்கத்தில் டி50 படத்தை உருவாக்கி வருகிறார் தனுஷ். கேங்ஸ்டர் படமாக உருவாகவுள்ள இந்தப்படம் தனுஷின் இயக்கத்தில் உருவாகிவரும் 2வது படம். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. படத்திற்காக மிகவும் பிரம்மாண்டமான அளவில் செட் போடப்பட்டு தற்போது சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
தனுஷ் இயக்கத்தில் டி50 படம்: டி50 படத்தில் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன், அபர்ணா முரளி ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். தனுஷும் இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். முந்தைய படத்தில் நீண்ட தலைமுடி, தாடி, மீசையுடன் காணப்படும் தனுஷ், இந்தப் படத்தில் லேசான தலைமுடியுடன் உள்ள கெட்டப்பில் காணப்படுகிறார். இந்தப்படத்தின் சூட்டிங் துரிதமாக எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக சேகர் கம்முலா படத்தில் தனுஷ் இணையவுள்ளதாக முன்னதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
அடுத்ததும் இயக்கம்தான்: ஆனால் தற்போது தனுஷ் தன்னுடைய அடுத்தப்பட இயக்கத்தை துவங்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் பூஜை தற்போது போடப்பட்டுள்ளதாகவும் அடுத்த வாரத்தில் குறிப்பாக 12ம் தேதி படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் தனுஷும் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்தடுத்து இயக்கம்: இந்தப் படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க கமிட்டாகியுள்ளார். டி50 படத்தை தொடர்ந்து அடுத்ததாக சேகர் கம்முலா படத்திலும் பாலிவுட் படத்திலும் தனுஷ் நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது தன்னுடைய இயக்கத்தில் 3வது படத்தில் தற்போது அவர் செயல்பட உள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தனுஷ் இயக்கத்தில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகவுள்ளது அவர்களை குஷியாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











