உங்களை நினைச்சு ரொம்ப பெருமையா இருக்கு... தனுஷ் பாராட்டு யாருக்கு தெரியுமா?

சென்னை : நடிகர் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் மிகவும் பிசியாக இருந்தாலும் சக நடிகர்களின் படங்கள் உள்ளிட்டவற்றை சமூக வலைதளங்களில் பாராட்டுவதற்கு மறப்பதில்லை. தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக காணப்படுகிறார். இன்றைய தினம் சாணிக் காயிதம் படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

சாணிக் காயிதம் படம்

சாணிக் காயிதம் படம்

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இன்றைய தினம் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகியுள்ளது சாணிக் காயிதம். இந்தப் படம் முன்னதாக டீசர் உள்ளிட்டவை வெளியிடப்பட்டு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

பழிவாங்கும் கதை

பழிவாங்கும் கதை

படம் வழக்கமான பழிவாங்கும் கதையை கதைக்களமாக கொண்டு வெளியாகியுள்ள நிலையில், வன்முறை தூக்கலாக காணப்படுகிறது. குறிப்பாக வில்லன்களை எப்படி கொல்ல வேண்டும் என்பதை கீர்த்தி சுரேஷ் விவரிக்கும் நிகழ்வு மிகவும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்களை பெற்றுள்ளது.

கீர்த்தி, செல்வராகவனுக்கு பாராட்டு

கீர்த்தி, செல்வராகவனுக்கு பாராட்டு

ஆயினும் படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவனின் நடிப்பு மிகவும் பாராட்டுக்கு உள்ளாகியுள்ளது. இந்தப் படத்தின்மூலம் செல்வராகவன் அறிமுகமாகியுள்ளார். ஆனால் இது அவரது அறிமுகப் படம் போல இல்லாமல் அவரது தேர்ந்த நடிப்பு வெளியாகியுள்ளது. அவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் மிரட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.

அழுத்தமான கதைக்களம்

அழுத்தமான கதைக்களம்

சிறப்பான திரைக்கதையுடன் சாணிக் காயிதம் படம் வெளியாகியுள்ளது. சாதீய வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல் போன்றவற்றை இந்தப் படம் முன் வைக்கிறது. தற்போதும் இத்தகைய சம்பவங்களை நாம் தினந்தோறும் கடந்து சென்று கொண்டு வரும் நிலையில், இத்தகைய சம்பவங்களுக்கு தீர்வு என்ன என்றும் இந்தப் படம் கேள்வி எழுப்பியுள்ளது.

தனுஷ் பாராட்டு

தனுஷ் பாராட்டு

இந்நிலையில் இந்தப் படத்தை நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். மிகவும் கொடூரமாக எடுக்கப்பட்டுள்ள பழிவாங்கும் படம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நடிகர்கள் நன்றாக நடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கீர்த்தி நன்றி

கீர்த்தி நன்றி

படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் குறித்து தான் பெருமை கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். தனுஷின் இந்த பதிவிற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது நன்றி தெரிவித்துள்ளார். தனுஷிடமிருந்து இத்தகைய பாராட்டு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அருண் மாதேஸ்வரன் -தனுஷ் கூட்டணி

அருண் மாதேஸ்வரன் -தனுஷ் கூட்டணி

அருண் மாதேஸ்வரனின் அடுத்த படத்தில் தனுஷ் இணைவது உறுதியாகியுள்ளது. இந்தப் படம் கேங்ஸ்டர் படமாக உருவாகவுள்ளது. இந்தப் படம் தனுஷின் 47வது படமாக உருவாக உள்ளது. தற்போது சாணிக் காயிதம் படம் ரிலீசாகியுள்ளதையடுத்து அடுத்ததாக இந்தப் படத்தில் அருண் மாதேஸ்வரன் கவனம் செலுத்தவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X