Dhanush: கேப்டன் மில்லருக்காக தனுஷ் செய்த செயல்.. மற்ற படங்களுக்கு இல்லாத சிறப்பு!

சென்னை: நடிகர் தனுஷ் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். இவரது நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலப் படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகி வருகின்றன.

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் இம்மாத இறுதியில் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் டி50 படத்தில் இணையவுள்ளார் நடிகர் தனுஷ்.

Actor Dhanush has been shooting for Captain Miller from 10 months

கேப்டன் மில்லருக்காக தனுஷ் செய்த செயல்: நடிகர் தனுஷ் தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்தி சர்வதேச அளவில் ரசிகர்களை கொண்டவராக காணப்படுகிறார். தமிழிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் தனுஷ் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாத்தி படம் வெளியானது. இந்தப் படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் வெளியான நிலையில், இநத்ப் படம் மூலம் தெலுங்கிலும் அவர் தன்னுடைய அறிமுகத்தை செய்தார். படம் தெலுங்கிலும் சிறப்பாக கைக்கொடுத்தது.

இந்நிலையில் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்தப்படத்திற்காக நடிகர் தனுஷ் அதிகமாகவே மெனக்கெட்டுள்ளார். அவரது கெட்டப்பை நீண்ட தாடி, மீசை, தலைமுடி என மாற்றி ஆளே முற்றிலும் மாறியிருந்தார். படத்தின் சூட்டிங் சென்னை, குற்றாலம், தென்காசி, மதுரை போன்ற இடங்களில் நடந்து வரும் நிலையில், விரைவில் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படம் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை ஒட்டிய கதைக்களத்தில் உருவாகியுள்ளது. படத்தில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்காக பீரியட் கால பிரம்மாண்ட செட்கள் போடப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. கலை இயக்குநர் ராமலிங்கம் இந்தப் படத்திற்காக சிறப்பாக செயல்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Actor Dhanush has been shooting for Captain Miller from 10 months

மேலும் இந்தப் படம் பீரியட் படமாக மட்டுமே எடுக்கப்பட்டுள்ளதாகவும் பல காலங்களை சேர்ந்த கதையாக எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் வாரத்தில் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அடுத்தமாதம் 28ம் தேதி தனுஷ் பிறந்தநாளையொட்டி படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் வரும் வாரத்தில் பர்ஸ்ட் லுக்குடன் இணைந்து படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்திற்காக மற்ற படங்களில் செய்யாத ஒரு செயலை தனுஷ் செய்துள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் வழக்கமாக ஒரு படத்திற்காக அதிகபட்சமாக 3 மாதங்கள் மட்டுமே கால்ஷீட் கொடுப்பார். ஆனால் கேப்டன் மில்லர் படத்திற்காக கடந்த 10 மாதங்கள் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். ஒவ்வொரு காட்சிக்காகவும் அவர் மெனக்கெட்டு வருகிறார். இதையடுத்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் காத்திருக்கிறது என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X