Maamannan First Review - மாமன்னன் முதல் விமர்சனம்..இடைவேளையில் தியேட்டர் தெறிக்கும்..புகழ்ந்த தனுஷ்

சென்னை: Maamannan First Review (மாமன்னன் முதல் விமர்சனம்) மாமன்னன் படத்தை பார்த்துவிட்டு நடிகர் தனுஷ் முதல் விமர்சனத்தை கொடுத்திருக்கிறார்.

பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தைத் தொடர்ந்து மூன்றாவது படமாக மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். மாரி செல்வராஜ் படத்தில் எப்போதும் ஒரு அரசியல் டச் இருக்கும் என்பதாலும், உதயநிதியின் கடைசி படம் இது என்பதாலும் பெரும் எதிர்பார்ப்பு படத்தின் மீது எழுந்திருக்கிறது.

முக்கியமாக வடிவேலு தாந்து இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியிருக்கும் சூழலில் இதில் அவரது நடிப்பை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ட்ரெயலரை பார்த்தவர்கள் நிச்சயம் இதில் வழக்கமான வடிவேலுவாக இல்லை என கமெண்ட்ஸ் செய்தனர்.

நாளை ரிலீஸ்: இப்படிபட்ட எதிர்பார்ப்புடன் படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே படத்தின் பாடல்கள் அனைத்திற்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருப்பதால் படத்தில் ரஹ்மானின் பின்னணி இசையை கேட்பதற்கும் ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர். இதன் காரணமாக படத்தின் டிக்கெட் புக்கிங்கும் நல்லவிதமாக சென்றுகொண்டிருக்கிறது.

படத்துக்கு சிக்கல்: இதற்கிடையே மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழாவில் தேவர் மகன் படம் குறித்து மாரி செல்வராஜ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் அவருக்கு பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். அதுமட்டுமின்றி படம் வெளியானால் சாதி கலவரம் உண்டாகும் எனவே படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கும் தொடரப்பட்டது. ஆனால் படத்துக்கு தடை இல்லை என உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்டது.

Actor Dhanush has given his first review Mamannan

அதுமட்டுமின்றி மாமன்னன் திரைப்படத்தை திரையிட்டால் திரையரங்கம் மீது தாக்குதல் நடத்துவோம் என அகில இந்திய ஃபார்வேர்டு ப்ளாக் கட்சி தேனியில் இருக்கும் வெற்றி திரையரங்கத்துக்கு மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முதல் விமர்சனம்: இந்நிலையில் நடிகர் தனுஷ் மாமன்னன் படத்தை பார்த்திருக்கிறார். அதன் பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில், "மாரி செல்வராஜின் மாமன்னன் ஒரு எமோஷன். மாரி உங்களை மிகப்பெரிதாக அணைக்கிறேன். வடிவேலுவும், உதயநிதி ஸ்டாலின் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். ஃபகத்தும், கீர்த்தியும் நன்றாக வேலை செய்திருக்கீறார்கள்.

இடைவேளை காட்சியில் கண்டிப்பாக திரையரங்குகள் தெறிக்கப்போகின்றன. இறுதியாக ஏ.ஆர்.ரஹ்மான் சார் அழகு" என பதிவிட்டிருக்கிறார். அவரது இந்த ட்வீட் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. தனுஷின் ட்வீட்டுக்கு படத்தில் நடித்த உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்து அந்த ட்வீட்டை ரீட்வீட் செய்திருக்கிறார்.

கர்ணன் தனுஷ்: தனுஷ் மாமன்னன் படத்தை உச்சக்கட்டமாக புகழ்ந்திருப்பதால் படத்தை பார்க்க ரசிகர்களிடம் ஆவல் அதிகரித்துள்ளது. தனுஷும் மாரி செல்வராஜும் ஏற்கனவே கர்ணன் படத்தில் இணைந்து பணியாற்றியிருக்கின்றனர். அடுத்ததாகவும் ஒரு படத்தில் இரண்டு பேரும் இணைந்து பணியாற்றவிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X