இங்கிலீஷ் எதுக்கு; தமிழே போதும் - ஹைதராபாத்தில் மாஸ் காட்டிய தனுஷ்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடந்த வாத்தி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் தனுஷ், 'இங்கிலீஷ்ல எதுக்கு பேசணும் தமிழில் பேசுகிறேன்' என அசத்தலாக பேசினார்.
துள்ளுவதோ இளமை படம் மூலம் அறிமுகமான தனுஷ் ஆரம்பத்தில் பலரால் அவரது உருவத்தை வைத்து கேலியும், கிண்டலையும் சந்தித்தவர். இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி தனது திறமையால் இந்தியாவின் முக்கியமான நடிகராக மாறியிருக்கிறார். கோலிவுட்டில் தொடங்கிய அவரது பயணம் தற்போது ஹாலிவுட்வரை சென்றிருக்கிறது.
நடிப்பு அசுரன்
நடிப்பு அசுரன் தனுஷ்
எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடும் தனுஷ் அசுரன் திரைப்படத்தில் தனது நடிப்பில் அசுர பாய்ச்சல் செய்திருந்தார். ஒரு தந்தையை தனது உடல்மொழியிலும், நடிப்பிலும் கொண்டுவந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அவரது நடிப்பைப் பார்த்து பாரதிராஜாவேக்கூட பெருமைப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நடிப்பு அசுரன் தனுஷ்
எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடும் தனுஷ் அசுரன் திரைப்படத்தில் தனது நடிப்பில் அசுர பாய்ச்சல் செய்திருந்தார். ஒரு தந்தையை தனது உடல்மொழியிலும், நடிப்பிலும் கொண்டுவந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அவரது நடிப்பைப் பார்த்து பாரதிராஜாவேக்கூட பெருமைப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வாத்தி தனுஷ்
கடந்த சில காலங்களாக சுமாரான படங்களையே கொடுத்துவந்த தனுஷுக்கு திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை ஈட்டிக்கொடுத்தது. இதன் மூலம் தனுஷ் கோலிவுட்டில் கம்பேக் கொடுத்திருக்கிறார். திருச்சிற்றம்பலத்துக்கு அடுத்ததாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்துவருகிறார் தனுஷ்.

மாஸ் காட்டும் வாத்தி ட்ரெய்லர்
வாத்தி படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன. கல்வி வணிகமயமாவதை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் படத்தில் தனுஷ் ஆசிரியர் வேடத்தில் நடித்திருக்கிறார். படம் பிப்ரவரி 17ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

எதுக்கு இங்கிலீஸ் தமிழே போதுமென்ற தனுஷ்
இந்நிலையில் வாத்தி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. அந்த விழாவில் கலந்துகொண்ட தனுஷ் பேசுகையில், "எனக்கு தெலுங்கு புரியும் ஆனால் பேச வராது. நீங்கள் எனது பக்கத்து மாநிலம்தான். எதற்காக இங்கிலீஷ்ல பேசணும்,. தமிழிலேயே பேசுறேன்" என்றவாறு தமிழில் பேச ஆரம்பித்தார்.
ஆனால் தனுஷ் பேசுவது புரியவில்லை என ரசிகர்கள் சிறிது நேரத்தில் கூறியதால் தனது பேச்சை ஆங்கிலத்தில் தொடர்ந்தார். அவர் பேசி முடித்ததும், விஐபி படத்தில் மூச்சுவிடாமல் ஒரே டேக்கில் தனுஷ் பேசிய வசனத்தை பேச ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற தனுஷ் தமிழில் அந்த வசனத்தை பேசி அப்லாஸ் அள்ளினார்.

தனுஷ்தான் ஒரிஜினல் தமிழனென ரசிகர்கள் கொண்டாட்டம்
தனுஷ் தமிழில் பேசும் வீடியோவைப் பார்த்த தனுஷ் ரசிகர்கள், பல நடிகர்கள் ஹைதராபாத் சென்றால் அவர்களது மார்க்கெட் தெலுங்கில் நிலைக்க வேண்டும் என்பதற்காக தமிழை விட்டுக்கொடுத்துவிடுவார்கள். ஆனால் தனுஷ் அப்படி இல்லை. எங்கு போனாலும் தமிழை விட்டுக்கொடுக்கமாட்டார் என கூறி அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications