என்னை கர்ணனா மாத்துனதுக்கும்…என் வாழ்க்கையில் நீங்க வந்ததுக்கு நன்றி..தனுஷ் நெகிழ்ச்சி !
சென்னை : கர்ணன் படத்தின் பத்திரைக்கையாளர் சந்திப்பு நடைபெற்ற இதில் கலந்து கொள்ளாதது குறித்து நடிகர் தனுஷ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் , ராஜிஷா விஜய், யோகி பாபு உள்ளிட்ட பலர் கர்ணன் படத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 9ந் தேதி வெளியாக உள்ளது.
தி கிரெ மேன் என்ற ஹாலிவுட் படத்தில் தனுஷ் நடித்து வருவதால் அவரால் இந்த பிரஷ் மீட்டில் கலந்து கொள்ள முடிவில்லை.

சீக்கிரம் வருவேன்
இந்நிலையில் நடிகர் தனுஷ் கர்ணன் படக்குழுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் கர்ணன் பட பிரஸ் மீட்டிங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி, உங்களுடன் நான் இருந்திருந்தால் இன்னும் சந்தோஷமாக இருந்து இருப்பேன். சீக்கிரம் வருவேன்.

ரொம்ப நன்றி மாரி
கர்ணன் எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். நான் ஸ்பெஷலா நினைக்கிற, கொண்டாடுற நிறைய பேர் இந்த படத்துல இருங்காங்க. இந்த படம் எனக்கு ஒரு நடிகனா, மனிதா நிறைய விஷயங்களை கத்துக் கொடுத்துச்சு, மாரி செல்வராஜோட உறுதியும், அவரோட மனிதத் தன்மையும் தினம் தினம் ஆச்சரியமா இருந்தது. ஒரு நபர் மாரி மாதிரி ஒரு நல்ல மனிதரா இருக்க முடியுமான்னு நான் அடிக்கடி யோசிப்பேன். என்னை உங்க கர்ணனா மாத்துனதுக்கும், என் வாழ்க்கையில் நீங்க வந்ததுக்கு ரொம்ப நன்றி மாரி. எப்பவும் இப்படியே இருங்க, உங்களுக்கு ஒரு ஸ்பெஷலான இடம் காத்துக்கிட்டு இருக்கு.

என்னை விட அதிகமா உழைப்பு
கர்ணன் படக்குழுவினருக்கும், அவங்க அர்ப்பணிப்பு, அன்பு, ஆதரவு எல்லாத்துக்கும் நன்றி, இந்த படத்துக்காக உடல் ரீதியா, மனரீதியாக உணர்ச்சி ரீதியா என்னை விட அதிகமா உழைப்பு அவங்க எல்லாருமே போட்டிருக்காங்க. கர்ணன் இவ்வோ நம்பத்தன்தையோட இருக்கு அப்படினா அது அவங்க எல்லாரோட கடும் உழைப்பால்தான்.

சீறும் கேள்விகளை ஏந்தி வருவான்
எனக்குத் தொடர்ந்து ஆதரவும், அன்பும் அளித்துவரும் என் ரசிகர்களுக்கு நன்றி. நான் என்னோட சிறந்த நடிப்பை கொடுக்க எப்போதுமே முயற்சி பண்றேன். கர்ணன் உங்க எல்லாரையும் சந்தோஷப்படுத்தும்னு நம்புறேன். இங்க வந்ததுக்கு எல்லாருக்கும் மறுபடியும் நன்றி. கர்ணன் வருவான் சீறும் கேள்விகளை ஏந்தி வருவன் என்று அந்த கடிதத்தில் தனுஷ் எழுதியுள்ளார்.


Click it and Unblock the Notifications











