Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
மும்பை: நடிகர் தனுஷ் சிறிதும் இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என அடுத்தடுத்த ஹிட்களை கொடுத்த தனுஷ், தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு முன்னதாக ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என அடுத்தடுத்த படங்களை இயக்கியுள்ளார்.
இதில் ராயன் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடைந்துள்ளது. படத்தை இயக்கி, நடித்துள்ளார் தனுஷ். இதையடுத்து உருவாகிவரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி நடித்து, தன்னுடைய வொண்டர்பார் பிலிம்சிற்காக தயாரிக்கவும் செய்துள்ளார். முற்றிலும் இளைஞர்களை கொண்டு இந்தப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் இன்னும் சிறிது சூட்டிங் மீதமுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ், அடுத்தடுத்த படங்களில் நிற்கக்கூட நேரமில்லாமல் நடித்து வருகிறார். திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் படங்களை அடுத்தடுத்து ஹாட்ரிக் வெற்றிப்படங்களாக கொடுத்த தனுஷ், தொடர்ந்து தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் ராயன் மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என அடுத்தடுத்த படங்களை இயக்கியுள்ளார். இதில் ராயன் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. விரைவில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள நிலையில், படத்தின் பிரமோஷன்களும் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
குபேரா படம்: இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார் தனுஷ். இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் நேற்றைய தினம் மும்பையில் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் மும்பையின் தாராவியை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி படத்திற்கான அதிகப்படியான யூகங்களை ஏற்படுத்தியுள்ளது. படம் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தா இணைந்துள்ளார்.
மும்பையில் துவங்கிய சூட்டிங்: மேலும் நடிகர் நாகார்ஜூனாவும் இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். அவர்தான் படத்தில் வில்லனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் துவங்கியுள்ள படத்தின் சூட்டிங்கில் தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்துள்ளனர். இவர்கள் இருவரின் காம்பினேஷன் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே வரும் ஜூலை 28ம் தேதி நடிகர் தனுஷின் பிறந்தநாளுக்காக அவரது ரசிகர்கள் தற்போதே தயாராகி வருகின்றனர். இன்னும் 95 நாட்கள் உள்ளதாக அவர்கள் தங்களது எதிர்பார்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
ரசிகர்கள் வெயிட்டிங்: நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் என கோலிவுட்டில் மட்டுமில்லாமல் டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட்டிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார் தனுஷ். அடுத்ததாக பாலிவுட்டிலும் புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். ஹெச் வினோத் உள்ளிட்ட இயக்குநர்களுடனும் தனுஷ் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டிலேயே அவரது அடுத்தடுத்த படங்கள் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக ரசிகர்களும் மரண மாஸாக வெயிட்டிங்கில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











