டோலிவுட்டின் சூப்பர் இயக்குநருடன் கைக்கோர்க்கும் நடிகர் தனுஷ்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மும்பை : நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படம் இன்றைய தினம் உலக அளவில் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் தனுஷ் அடுத்ததாக பாலிவுட்டின் தேசிய விருது பெற்ற இயக்குநருடன் இணைந்து படம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நெட்பிளிக்சில் வெளியீடு

நெட்பிளிக்சில் வெளியீடு

நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படம் உலக அளவில் 190 நாடுகளில் 17 மொழிகளில் வெளியாக உள்ளது. நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ள இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளன.

கதை சொல்ல இயக்குநர்கள் காத்திருப்பு

கதை சொல்ல இயக்குநர்கள் காத்திருப்பு

அடுத்ததாக ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்து வருகிறார் தனுஷ். தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்திலும் இயக்குநர்கள் செல்வராகவன் மற்றும் வெற்றி மாறன் இயக்கத்திலும் நடிக்க உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு இயக்குநர்கள் தனுஷிடம் கதை சொல்ல காத்திருக்கின்றனர்.

சேகர் கம்முலாவுடன் இணையும் தனுஷ்

சேகர் கம்முலாவுடன் இணையும் தனுஷ்

இந்நிலையில் டோலிவுட்டில் தேசிய விருது பெற்ற இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் அடுத்ததாக நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷும் தேசிய விருது பெற்ற நடிகர் என்பதால் இவர்கள் இருவரும் இணைவது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படக்குழு அறிவிப்பு

படக்குழு அறிவிப்பு

படத்தை நாராயணதாஸ் நரங் என்பவர் தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இந்த படம் உருவாக உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்தின் நாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்ற நடிகர் நடிகைகள் உள்ளிட்டவை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X