வெற்றிமாறனின் விடுதலை படத்தில் இணைந்த தனுஷ்... அசத்தல் அப்டேட்!
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தில் நடிகர் தனுஷும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்கள் ஒருவர் வெற்றிமான். அவரது இயக்கத்தில் இதுவரை வெளியான ஒவ்வொரு படமும் ஒரு காவியமாக உள்ளது.
விமர்சன ரீதியாகவும் சரி, வசூல் ரீதியாகவும் சரி வெற்றிமாறனின் எப்போதும் ஸ்பெஷல் தான். தனுஷை வைத்து இயக்கிய பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன்.

வடசென்னை படம்
அதனை தொடர்ந்து மீண்டும் தனுஷை வைத்து ஆடுகளம் படத்தை இயக்கினார். இந்தப் படம் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த ஸ்க்ரீன் ப்ளேவுக்கான தேசிய விருதுகளை வென்றது. அதனை தொடர்ந்து மீண்டும் தனுஷை வைத்து வட சென்னை படத்தை இயக்கினார் வெற்றி மாறன்.

தேசிய விருது
இந்தப் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தப்படியாக தனுஷை வைத்து அசுரன் படத்தை இயக்கினார் வெற்றி மாறன். இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சிறந்த படத்திற்கான தேசிய விருது இப்படத்துக்கு கிடைத்தது. மேலும் இப்படத்திற்காக நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.

விடுதலை படம்
இந்நிலையில் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அதாவது வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' என்கிற படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.
Recommended Video

இளையராஜா இசை
இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். நடிகர் விஜய் சேதுபதியும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பாடல் பாடிய தனுஷ்
இந்நிலையில், 'விடுதலை' படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிகர் தனுஷ் பாடல் ஒன்றை பாடி உள்ளாராம். இதற்காக இசையமைப்பாளர் இளையராஜாவிடம் பிரத்யேக பயிற்சி பெற்று, நடிகர் தனுஷ் இப்பாடலை பாடி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











