Don't Miss!
- News
ட்விஸ்ட்! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஆதரவு கேட்ட எடப்பாடி.. நிராகரித்த ஏ.சி.சண்முகம்! என்ன சொன்னர்
- Finance
தீபிந்தர் கோயல் கொடுத்த செம அப்டேட்.. 800 பேருக்கு நல்ல சான்ஸ்.. நீங்க ரெடியா?
- Lifestyle
உங்க பர்ப்யூம்கள் நீண்ட நேரம் உங்களை வாசனையாக உணர வைக்க இத பண்ணுங்க போதும்...!
- Sports
விராட் கோலிக்கு மீண்டும் ஒரு வீக்னஸ்.. தொடர்ச்சியாக ஒரே முறையில் அவுட்.. வசீம் ஜாஃபர் எச்சரிக்கை!
- Technology
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- Automobiles
அவ்வளவு காசு வைத்திருந்தும் மாடிஃபைடு கார்களை பயன்படுத்தும் இந்திய விஐபி-கள்!! இவ்வளவு பேர் இருக்காங்களா?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
வாரிசு பட தயாரிப்பாளருடன் இணையும் தனுஷ்.. யார் டைரக்டர் தெரியுமா?
சென்னை : தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் அதிகமாக நடித்து வருகிறார் நடிகர் தனுஷ்.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி படத்தை இயக்கியுள்ளார் வெங்கி அட்லுரி. இந்தப் படம் பிப்ரவரியில் ரிலீசாக உள்ளது.
தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நேரடிப் படங்களில் தனுஷை நடிக்க வைக்க இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விஜய் ரசிகர்கள் என்னை டார்க்கெட் பண்ணிட்டாங்க... இது எனக்கு தெரிஞ்சது தான்: ஜேம்ஸ் வசந்தனின் மெசேஜ்

நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் என தன்னுடைய எல்லைகளை விரிவுப்படுத்தி நடித்து வருகிறார். இவரது தி க்ரே மேன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், அடுத்ததாக இவரது நடிப்பில் வாத்தி என்ற படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது. தெலுங்கில் சார் என்ற பெயரில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.

தனுஷின் வாத்தி படம்
பிரபல இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சம்யுக்தா தனுஷிற்கு ஜோடியாகியுள்ளார். இந்தப் படம் மூலம் நேரடியாக தெலுங்கு ரசிகர்களை சந்திக்க உள்ளார் தனுஷ். தமிழ், இந்தி, ஹாலிவுட்டில் தன்னை நிரூபித்துள்ள தனுஷிற்கு அதிகமான தெலுங்கு ரசிகர்கள் காணப்படுகின்றனர். இவரது பல படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளன.

சேகர் கம்முலாவுடன் கைக்கோர்க்கும் தனுஷ்
இந்நிலையில் வாத்தி படத்தை தொடர்ந்து தெலுங்குப்பட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்கிறார் தனுஷ். இந்தப் படத்தின் பூஜை கடந்த சில வாரங்களுக்கு முன்பு எளிமையாக போடப்பட்டது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்குப்பட தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் தனுஷ் இணையவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாரிசு தயாரிப்பாளருடன் இணையும் தனுஷ்
இந்தப் படத்தை பிரபல தெலுங்குப்பட இயக்குநர் கிஷோர் ரெட்டி இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படமும் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. விஜய்யின் வாரிசு படத்தை தயாரித்துள்ள தில் ராஜூ அடுத்ததாக தனுஷின் இந்தப் படத்தையும் தமிழில் தயாரிக்கவுள்ளார்.

தெலுங்குப்பட இயக்குநர்களுடன் தனுஷ்
இந்தப் படத்தின் இயக்குநர் கிஷோர் ரெட்டி, சொந்த ஊரு, தி டேக் ஓவர் மற்றும் ஸ்ரீகாரம் ஆகிய படங்களை இயக்கியவர். இந்நிலையில் தற்போது இவர் தனுஷை இயக்கவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் திருச்சிற்றம்பலம் என்ற வெற்றிப் படத்தை கொடுத்துள்ள தனுஷ், அடுத்தடுத்து தெலுங்குப்பட இயக்குநர்கள் இயக்கத்தில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.