Dhanush: மொட்டையடித்து ஆளே மாறிப்போன தனுஷ்.. வெளியான புகைப்படம்!
சென்னை: நடிகர் தனுஷ் தனது வாத்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்தப் படம் முன்னதாக தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது டிசம்பருக்கு ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.
அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள டி50 படத்தை இயக்கி நடிக்கவுள்ளார் நடிகர் தனுஷ். விரைவில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது.

டி50 படத்திற்காக மொட்டையடித்து ஆளே மாறிப்போன தனுஷ்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான வாத்தி படம் மிகப்பெரிய வெற்றியை அவருக்குத் தேடித் தந்தது. இந்தப்படம் சார் என்ற பெயரில் தெலுங்கில் வெளியானது. ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என மாஸ் காட்டிவரும் தனுஷ், இந்தப் படத்தின் மூலம் டோலிவுட்டிலும் அறிமுகமானார். தன்னுடைய முதல் படம் தமிழில் வெளியானபோது இருந்த படபடப்பு இந்தப் படத்தின் ரிலீசின்போதும் இருந்ததாக அவர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆனால் தெலுங்கு ரசிகர்கள் அவரை சிறப்பாகவே ஏற்றுக் கொண்டனர். படம் தெலுங்கிலும் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.
இந்தப் படத்தை தொடர்ந்து ராக்கி, சாணிக் காயிதம் போன்ற அழுத்தமான படங்களை கொடுத்துள்ள அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார் தனுஷ். இந்தப் படத்தின் ரிலீஸ் தீபாவளியையொட்டி இருக்கும் என முன்னதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், படப்பிடிப்பின்போது ஏற்பட்ட சில தடங்கல்கள் காரணமாக தற்போது படத்தின் ரிலீஸ் டிசம்பருக்கு தள்ளிப் போயுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி ட்ரெண்டானது.

இந்தப் படம் மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுதந்திர காலகட்டத்திற்கு முந்தைய கதைக்களத்தில் தற்போது உருவாகியுள்ள இந்தப் படம் அடுத்தடுத்து 1970 மற்றும் தற்போதைய காலக்கட்டங்களை முன்னிறுத்தி அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்காக நடிகர் தனுஷ் நீண்ட, தாடி, மீசை மற்றும் தலைமுடியுடன் கடந்த சில மாதங்களாக காணப்பட்டார்.
இந்நிலையில் தற்போது தன்னுடைய டி50 படத்திலும் கவனம் செலுத்தவுள்ளார் நடிகர் தனுஷ். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை இயக்கி நடிக்கவுள்ளார் தனுஷ். படத்தில் விஷ்ணு விஷால், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கேங்ஸ்டர் படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் நீண்ட தாடி, தலைமுடி, மீசையுடன் காணப்பட்ட தனுஷ், தற்போது மொட்டையடித்து க்ளீன் ஷேவ் செய்து காணப்படுகிறார். டி50 படத்தில் அவரது லுக் இப்படித்தான் இருக்கும் என்று தகவல்கள் வெளியான நிலையில், தற்போது, அந்தக் கெட்டப்புடன் அவரது புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன், முகத்தில் மாஸ்க் மற்றும் தலையில் தொப்பியுடன் அவர் இந்த புகைப்படங்களில் காணப்படுகிறார்


Click it and Unblock the Notifications











