அடுத்தடுத்த தெலுங்குப் படங்களில் கமிட்டாகும் நடிகர் தனுஷ்.. வேணு உடுகுலா இயக்கத்தில் நடிப்பு!

சென்னை : நடிகர் தனுஷ் அடுத்தடுத்த சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து இவரது நடிப்பில் ஓடிடி ரிலீஸ் படங்கள் வெளியாகின.

இதையடுத்து திருச்சிற்றம்பலம் என்ற படத்தை சன் பிக்சர்சிற்காக செய்த தனுஷ், படத்தை வெற்றிப் படமாக்கினார்.

இந்தப் படத்தை தொடர்ந்து நானே வருவேன் படமும் வெளியாகியது. ஆனால் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து தனுஷின் வாத்தி படம் தமிழ், தெலுங்கில் வெளியாகவுள்ளது.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்த சிறப்பான படங்கள் ஹாலிவுட், பாலிவுட் கோலிவுட் என வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், திருச்சிற்றம்பலம் என்ற படத்தை சிறப்பான வெற்றிப்படமாக்கினார். இந்தப் படத்தின் நித்யா மேனனுடன் இணைந்து அவர் நடித்திருந்தார். படத்தின் கதைக்களம் எளிமையாக இருந்தபோதிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தனுஷின் நானே வருவேன் படம்

தனுஷின் நானே வருவேன் படம்

இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் நானே வருவேன் என்ற படம் வெளியானது. இந்தப் படத்தை அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கியிருந்த நிலையில், இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. படம் பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்டமான படைப்புடன் மோதிய நிலையில், சிறப்பான வெற்றியை பெற படம் தவறியது.

வாத்தி படத்தில் தனுஷ்

வாத்தி படத்தில் தனுஷ்

இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது வாத்தி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். இந்தப் படத்தின்மூலம் தனுஷ் நடிப்பில் நேரடி தெலுங்குப் படம் வெளியாகவுள்ளது. தெலுங்கில் Sir என்ற பெயரில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் பாடல் வெளியாகி சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது. விரைவில் இந்தப் படம் ரிலீசாகவுள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் அதிகரித்துள்ளது.

 தனுஷின் கேப்டன் மில்லர் படம்

தனுஷின் கேப்டன் மில்லர் படம்

இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்தப் படத்திற்காக பிரம்மாண்டமான கிராமத்து செட்கள் போடப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. பீரியட் படமாக உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை தொடர்ந்து தெலுங்குப்பட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் ஏப்ரல் மாதத்தில் புதிய படத்திற்காக இணையவுள்ளார்.

வேணு உடுகுலா இயக்கத்தில் தனுஷ்?

வேணு உடுகுலா இயக்கத்தில் தனுஷ்?

இதனிடையே இந்தப் படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்குப்பட இளம் இயக்குநர் வேணு உடுகுலா இயக்கத்தில் தனுஷ் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் நீதி நாதி ஒகே கதா, விரட்ட பர்வம் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்துள்ள வேணு உடுகுலா தனுஷை சமீபத்தில் சந்தித்து இந்த ஸ்கிரிப்ட் குறித்து விவாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை சிதாரா என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த தெலுங்குப் படங்கள்

அடுத்தடுத்த தெலுங்குப் படங்கள்

தெலுங்குப்பட இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் Sir படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். இந்தப் படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்குப்பட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்திலும் வேணு உடுகுலா இயக்கத்திலும் அடுத்தடுத்த தெலுங்குப்படங்களில் அவர் நடிக்கவுள்ளார். இந்தப் படங்கள் தமிழிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ரசிகர்களுக்கு அடுத்தடுத்த ட்ரீட்களை அவர் கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X