விஜய், சூர்யாவைத் தொடர்ந்து தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்!
சென்னை: நடிகர் தனுஷ், இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அவரது பிறந்த நாளில் வெளியாகும் என தெரிகிறது.
முன்பெல்லாம் படத்திற்கு பூஜை போடும் போதே படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும். ஆனால் இப்போது, படத்தின் லேட்டாக அறிவிக்கப்படுவதே ட்ரெண்டாக உள்ளது.

விஜயின் 63-வது படம், 'தளபதி 63’ என தொடக்கத்தில் பெயர் வைக்கப்பட்டு, படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியது.
அடுத்ததாக நடிகர் தனுஷ் வரும் ஜூலை 28 தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இப்போதே சமூக வலை தளங்களை அவரது ரசிகர்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டனர். ட்விட்டரில் தனுஷ் பேரில் புதிய புதிய ஹேஸ் டேக்கை உருவாக்கி அவரது ரசிகர்கள் அவரது பிறந்த நாளை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.
தனுஷ் ஆக்டர், புரொடியூசர்,பிண்ணனி பாடகர்,கதாசிரியர்,திரைகதை எழுத்தாளர், பாடலாசிரியர்,இயக்குனர் என பன்முகம் கொண்டவர். துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் தொடங்கிய தனுஷின் கலை பயணம் அவரது திறமையாலும் அவரது கடின உழைப்பாலும் ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர வைத்தது.
தனுஷ் தற்போது வெற்றி மாறனின் 'அசுரன்’ மற்றும் கொடி இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கும் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார். இரு படங்களிலும் தனுஷிற்கு இரட்டை வேடம். துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில், சினேகா மற்றும் மெஹ்ரின் பிஸாடா கதை நாயகிகளாக நடிக்கின்றனர். ஓம்பிரகாஷின் ஒளிப் பதிவு, விவேக் மெர்வின் இசை அமைப்பாளர், தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா வில்லனாக நடிக்கிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் அவரது பிறந்த நாளில் வெளியாகலாம் என்ற பேச்சு கோலிவுட்டில் நிலவுகிறது. தனுஷ் மற்றும் சினேகா ஏற்கனவே புதுப்பேட்டையில் நடித்திருந்தாலும் மெஹ்ரின் பிஸாடா இந்த படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகமாகிறார்.
இரு தினங்களுக்கு முன்னர்தான் சூர்யாவின் பிறந்த நாளையொட்டி காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











