மாரி செல்வராஜை கண்டெடுத்த விஞ்ஞானி தனுஷ் தான்!

சென்னை: பரியேறும் பெருமாள் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ்

அதைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்தார்

இந்த நிலையில் மாரி செல்வராஜை கண்டெடுத்த விஞ்ஞானி தனுஷ் தான் என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு புகழ்ந்து பேசியுள்ளார்.

சாதி கொடுமைகள்

சாதி கொடுமைகள்

இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். பா ரஞ்சித் நீலம் புரோடக்சன் தயாரிப்பில் வெளியான இந்த படத்தில் கதிர் ஹீரோவாக நடித்து இருப்பார். இன்றளவும் தமிழ்நாட்டில் உள்ள சில கிராமங்களில் நடந்தேறி வரும் சாதிய பாகுபாடு தீண்டாமை கொடுமைகள் பற்றியும் அழுத்தமாக பரியேறும் பெருமாள் கூறியிருந்தது அனைவர் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்றது.

கர்ணன்

கர்ணன்

இதுவரை சாதி குறித்த பல படங்கள் வெளியாகி இருந்தாலும் பரியேறும் பெருமாள் அதிலிருந்து முற்றிலும் விலகி புதுவிதமான கருத்தை சமூகத்திற்கு கொடுத்ததால் இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. பரியேறும் பெருமாள் வெற்றியை தொடர்ந்து மாரி செல்வராஜ் தமிழ் திரை உலகில் அனைவராலும் கவனிக்கப்பட்டார் இந்நிலையில் அடுத்ததாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் தனுஷ் ஹீரோவாக நடித்த கர்ணன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கினார்.

உயிரோட்டமான கதை

உயிரோட்டமான கதை

இந்த முறை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கர்ணன் படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் அமைத்து எடுக்கப்பட்டது. இதுவரை தனுஷ் பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் கர்ணன் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நடிப்பை தனுஷ் மூலம் வெளிக் காட்டியது. உயிரோட்டமான கதை களத்தை எடுத்துக் கொண்டு ரசிகர்கள் மீது மிக மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கர்ணன் மாபெரும் வெற்றி பெற்றது. கர்ணன் வெற்றியை தொடர்ந்து மாரி செல்வராஜ் இப்பொழுது உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் மாமன்னன் என்ற படத்தை இயக்கி வருகிறார். அதைத் தொடர்ந்து துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ஒன்றையும் இயக்கி வருகிறார்.

மாரி செல்வராஜை கண்டெடுத்த விஞ்ஞானி

மாரி செல்வராஜை கண்டெடுத்த விஞ்ஞானி

இந்த நிலையில் கர்ணன் ஓராண்டு நிறைவு பெற்றதை அடுத்து விழாவில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பரியேறும் பெருமாள் பார்த்தபொழுது மாரி செல்வராஜ் மீது எனக்கு ஒரு இனம் புரியாத அன்பு ஏற்பட்டது. அதன்பிறகு தனுஷ்தான் மாரி செல்வராஜை என்னிடம் அனுப்பி கதையை கேட்க சொன்னார். கர்ணன் படத்தின் கதையை புத்தகமாக மாரி செல்வராஜ் என்னிடம் கொடுத்தார் அந்த புத்தகத்தில் முதல் பக்கத்தை படிக்கும் பொழுது எனக்கு தெரிந்து விட்டது இந்த படம் சாதாரண படமில்லை என்பது. மாரி செல்வராஜை கண்டெடுத்த விஞ்ஞானி தனுஷ் தான். என விழாவில் கலைபுலி எஸ் தாணு தனுஷை புகழ்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X