Actor Dhanush: செல்வராகவனை பழிவாங்கிய தனுஷ்.. எப்படி தெரியுமா.. அவரே சொன்ன விஷயம்!
சென்னை: நடிகர் தனுஷ் அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து படங்களை கொடுத்து வரும் நிலையில் அவருடைய இயக்கம் மற்றும் நடிப்பில் ராயன் படம் உருவாகியுள்ளது. இந்த படம் வரும் 26ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ராயன் படத்தில் தனுஷுடன் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், துஷாரா விஜயன், அபர்ணா முரளி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் தனுஷ் உள்ளிட்ட அனைத்து படக்குழுவினரும் பங்கேற்று சிறப்பித்தனர். தனுஷும் செல்வராகவனும் நிகழ்ச்சியில் மாறி மாறி பாராட்டிக் கொண்டதை பார்க்க முடிந்தது.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷின் ராயன் படம் அவரது இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ளது. ராயன் படத்தில் தனுஷ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், துஷாரா விஜயன், அபர்ணா முரளி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களின் நடித்துள்ளனர். வரும் 26ம் தேதி இந்த படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு நேற்றைய தினம் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவன தயாரிப்பான ராயன் படம் வடசென்னையை மையமாகக் கொண்டு கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
ராயன் படம்: தன்னுடைய முதல் படத்தில் வயதான நபரின் உணர்ச்சிகளை மையமாக வைத்து அவரது வாழ்க்கையை பேசிய தனுஷ், இந்த படத்தில் கேங்ஸ்டர் கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார். இந்த படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் படத்தின் ரிலீசிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஏஆர் ரஹ்மான் இசையில் இந்த படத்தின் அடுத்தடுத்து மூன்று பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்நிலையில் நேற்றைய தினம் படத்தின் இசை வெளியீடு மிகவும் பிரம்மாண்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இசை வெளியீட்டில் பேசிய தனுஷ்: நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், தன்னுடைய சகோதரரும் பிரபல இயக்குனருமான செல்வராகவனுக்கு மிகப்பெரிய பாராட்டுகளை தெரிவித்துள்ளார். செல்வராகவன் தன்னுடைய ஆசான் மற்றும் குரு என்று பாராட்டிய தனுஷ், அவர் தனக்கு நடிப்பை மட்டும் இல்லாமல் கிரிக்கெட் மற்றும் ஒட்டுமொத்த உலகத்தையும் சொல்லிக் கொடுத்துள்ளதாக நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். துவக்கத்தில் இவன்லாம் ஒரு நடிகனா என்ற விமர்சனங்களை தான் சந்தித்த நிலையில், தன்னை நடனம் ஆட வைத்து செல்வராகவன் அழகு பார்த்ததாகவும் தனுஷ் கூறியுள்ளார்.
செல்வராகவனை பழிவாங்கிய தனுஷ்: தன்னை செல்வராகவன் இயக்கியபோது திட்டியுள்ளதாகவும் அடித்துள்ளதாகவும் டார்ச்சர் செய்துள்ளதாகவும் அதேபோல தான் செல்வராகவனை இயக்கியபோது பல டேக்குகளை கொடுத்து டார்ச்சர் செய்ததாகவும் அந்த ஃபீல் மிகச்சிறப்பாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பல்வேறு விஷயங்களை பேசிய தனுஷ், தான் யாரென்று தனக்கும், தன்னுடைய பெற்றோருக்கும் கடவுளுக்கும் தன் பசங்களுக்கும் தன்னுடைய ரசிகர்களுக்கும் தெரியும் என்றும் ஆனால் தன்னை வெறுப்பவர்களுக்கு காலம் பதில் சொல்லும் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











