தி கிரே மேன்..கொடூர வில்லனாக மிரட்டும் தனுஷ்..தரமான சம்பவம் வெயிட்டிங்!
சென்னை : நடிகர் தனுஷ் 'தி கிரே மேன்'படத்தில் கொடூர கொலைகாரனாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
தமிழ் சினிமாவில் பன்முகத்திறன் கொண்ட நடிகர்களுள் ஒருவர் தனுஷ். நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என மாஸ் ஹீரோவாக இருக்கிறார்.
திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில், திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து படம் அடுத்த மாதம் 18ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார்.

தி கிரே மேன்
கேப்டன் அமெரிக்கா பட வரிசையில் இரண்டு படங்கள், அவெஞ்சர்ஸ் பட வரிசையில் இரண்டு படங்களை இயக்கி, ஹாலிவுட்டில் முன்னணி இயக்குநர்களாகத் திகழ்ந்து வரும் இயக்குநர்கள் இணை ஆண்டனி மற்றும் ஜோ ருஸ்ஸோ. ருஸ்ஸோ பிரதர்ஸ் என்று அழைக்கப்படும் இவர்களது இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘தி கிரே மேன்'.

தனுஷ் சிறந்த நடிகர்
ரையான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ் ஆகிய ஹாலிவுட்டில் டாப் நடிகர்களுடன் தனுஷ் இணைந்து நடித்துள்ளதால் அவரின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பதை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். மேலும், தனுஷ் நம்பமுடியாத, சிறந்த நடிகர். நாங்கள் சண்டைக் காட்சியை படமாக்கிய போதும், பல முறை ரீ ஷூட் செய்தோம். ஆனால், ஒருமுறைகூட தனுஷ் தவறு செய்யவில்லை என அவருடன் நடித்த ரியான் காஸ்லிங் தனுஷை பாராட்டி இருந்தார்.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில்
இந்தப் படத்தில் அவிக் சான் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 22-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான இதன் டீசர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி அமெரிக்காவில் திரையிடப்பட்டது. இதில் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் நடிகர் தனுஷ் கலந்துகொண்டார்.

கொடூர கொலைகாரன்
இந்நிலையில், தி கிரே மேன் திரைப்படத்தின் கதாபாத்திரம் குறித்து பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்த தனுஷ், மோசமானவனாக நடிப்பது ஜாலியாக இருக்கும் அதை நான் எப்போதும் விரும்புவேன். மேலும், இப்படத்தில், அவிக் சான் என்ற கதாபாத்திரத்துக்காக இயக்குநர்கள் அருமையான பின்னணி கதை களத்தை வைத்துள்ளார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த அவிக் சான் எப்படி கொடூரமான கொலைகாரன் ஆகிறான் என்று கதை சொல்லும். கொடூர கொலைகாரனாக இருந்தாலும், அவிக் சான், அவருக்கு என்று சில நேர்மையான கொள்கைகளை வைத்து இருக்கிறார். காரணம் இல்லாமல் யாரையும் கொல்லமாட்டார். அந்த கதாபாத்திரத்தை பொருத்தவரை அவன் மரியாதைக்குரிய மனிதன் என்றார்.

ரூ.4 கோடி சம்பளம்
மேலும், தி கிரே மேன் திரைப்படத்திற்காக நடிகர் தனுஷ் 5 லட்சம் அமெரிக்க டாலர்களை சம்பளமாக வாங்கியுள்ளாராம். இதன் இந்திய மதிப்பு கிட்டத்தட்ட ரூ.4 கோடியாம். கோலிவுட் படங்களில் நடிக்க தனுஷ் 15 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நிலையில், ஹாலிவுட் படத்தில் குறைந்த அளவு சம்பளத்தை வாங்கி உள்ளார். I


Click it and Unblock the Notifications











