எம்ஜிஆர் பிறந்தநாளில் நாடோடி மன்னன் பாடலை ரிலீஸ் செய்த ‘வாத்தி’ தனுஷ்!

சென்னை : நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள படம் வாத்தி. இந்தப் படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தின் முதல் சிங்கிள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான நிலையில் தற்போது இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது.

எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வரும்நிலையில், வாத்தி படத்திலிருந்து நாடோடி மன்னன் பாடல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷின் வாத்தி படம்

நடிகர் தனுஷின் வாத்தி படம்

நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள படம் வாத்தி. தெலுங்கில் இந்தப் படத்தின் பெயர் சார். இந்தப் படத்தின்மூலம் தனுஷ் தெலுங்கிலும் களமிறங்கவுள்ளார். ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என தொடர்ந்து படங்களில் நடித்துவந்த தனுஷ் தற்போது டோலிவுட்டிலும் நடித்துள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

தள்ளிப் போன ரிலீஸ்

தள்ளிப் போன ரிலீஸ்

இந்தப் படம் கடந்த டிசம்பர் மாதத்திலேயே ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிப் போனது. முன்னதாக தனுஷின் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வாத்தி படத்திற்கும் அதிகமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

வாத்தி படத்தின் 2வது சிங்கிள்

வாத்தி படத்தின் 2வது சிங்கிள்

வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகியுள்ள வாத்தி படத்தில் தனுஷிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடத்துள்ளார். முன்னதாக இந்தப் படத்தின் வா வாத்தி பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் தற்போது படத்தின் அடுத்த பாடல் வெளியாகியுள்ளது.

நாடோடி மன்னன் பாடல்

நாடோடி மன்னன் பாடல்

படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், நாடோடி மன்னன் என்ற இரண்டாவது பாடலை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடலை அந்தோணி தாசன் பாடியுள்ளார். இன்றைய தினம் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரும்நிலையில் தற்போது அவரது படத்தலைப்பில் வாத்தி படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஜிவி பிரகாஷ் மகிழ்ச்சி

ஜிவி பிரகாஷ் மகிழ்ச்சி

இதுகுறித்து தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், வாத்தியார் எம்ஜிஆர் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது இந்தப் பாடலை டெடிகேட் செய்வது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ரசிகர்களை கவர்ந்த முதல் பாடல்

ரசிகர்களை கவர்ந்த முதல் பாடல்


முன்னதாக வாத்தி படத்தின் வா வாத்தி பாடல் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஏராளமான வியூஸ் மற்றும் லைக்ஸ்களையும் அள்ளியது. லிரிக் வீடியோவாக வெளியான நிலையிலும் இந்த பாடலில் தனுஷ் மற்றும் சம்யுக்தா மேனனின் கெமிஸ்ட்ரி பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X