Dhanush: ட்ரெயிலருக்கு முன்னோட்டம்.. தனுஷ் வெளியிட்ட கேப்டன் மில்லன் புது போஸ்டர்!

சென்னை: நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் வரும் 12ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. இதில் தன்னுடைய மகன்களுடன் கலந்துக் கொண்ட நடிகர் தனுஷ், படம் குறித்தும் மற்ற விஷயங்கள் குறித்தும் தன்னுடைய பல கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டார். இந்தப் படத்திற்காக வித்தியாசமான கெட்டப்பில் அவர் நடித்தது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக தன்னுடைய படங்களுக்கு 3 மாதங்கள் மட்டுமே கால்ஷீட் கொடுக்கும் வழக்கமுடைய தனுஷ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான கேப்டன் மில்லர் படத்திற்காக 10 மாதங்கள் வரை கால்ஷீட் கொடுத்து நடித்தார். இந்தப் படத்தின் டீசர், பர்ஸ்ட் லுக் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் ரிலீசாகவுள்ளதாக தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் அறிவித்துள்ளனர். முன்னதாக வெளியான டீசர் படத்திற்கான எதிர்பார்ப்பை மிகவும் அதிகமாக வெளிப்படுத்திய நிலையில் தற்போது டிரெயிலரும் அதிகமான எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.

Actor Dhanush released new poster of Captain miller movie

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் கேப்டன் மில்லர். படத்தை இயக்கியுள்ளார் அருண் மாதேஸ்வரன். இவரின் ராக்கி, சாணி காயிதம் படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக இவரது கேப்டன் மில்லர் படம் வரும் 12ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டிலேயே இந்தப் படம் டிசம்பர் வெளியீடாக ரிலீசாகவிருந்த சூழலில் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. இந்நிலையில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் படம் வரும் 12ம் தேதி ரிலீசாகவுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

கேப்டன் மில்லர் படம்: சுதந்திர போராட்ட காலத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் இதில் பங்கேற்றனர். இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் டிரெயிலர் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சுதந்திர போராட்டத்தை மையமாக கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் நீண்ட தாடி, தலைமுடி, மீசை சகிதம் தனுஷை பார்க்க முடிந்தது.

கேப்டன் மில்லர் டிரெயிலர்: இன்று மாலை படத்தின் டிரெயிலர் வெளியாகவுள்ள நிலையில் தற்போது கேப்டன் மில்லர் படத்தின் புதிய போஸ்டரை தனுஷ் உள்ளிட்ட படக்குழு தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் இன்று மாலை 5 மணியளவில் படத்தின் ட்ரெயிலர் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற போஸ்டர்களில் தனுஷ் ஆக்ரோஷமான போஸ்களை கொடுத்துள்ள நிலையில், இதில் மிகவும் சாந்தமான தனுஷை பார்க்க முடிகிறது. அழுத்தமான அதே நேரத்தில் தீவிரமான மற்றும் சிந்தனைகளுடன் கூடிய தனுஷை இந்த போஸ்டரில் பார்க்க முடிகிறது.

ரசிகர்கள் உற்சாகம்: சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். முன்னதாக படத்தின் பாடல்களும் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது ரசிகர்களிடையே மிகவும் அதிகமான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக வெளியான டீசர் மிகப்பெரிய அளவில் தனுஷின் கேரக்டரை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த நிலையில் தற்போது வெளியாகவுள்ள டிரெயிலரும் அதற்கு சிறிதும் குறைவில்லாமல் அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X