Actor Dhanush: தொடரும் ராயன் பட கொண்டாட்டம்.. இன்னைக்கு யாரோட போஸ்டர் தெரியுமா?
சென்னை: நடிகர் தனுஷின் இயக்கத்தில் அவரது ஐம்பதாவது படமாக உருவாகியுள்ள படம் ராயன். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் படத்தின் நடிகர்களை அவர்களின் லுக்கை வெளிப்படுத்தும் வகையில் போஸ்டர்களை வெளியிட்டு வருகிறார் தனுஷ். இந்த படத்தை ப பாண்டி படத்திற்கு பிறகு நீண்ட காலங்களுக்கு பிறகு தனுஷ் இயக்கியுள்ள நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து காளிதாஸ், சந்திப் கிஷன், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா முரளி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
ராயன் படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் படத்தை தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் 70 சதவகித சூட்டிங்கையும் முடித்துள்ளார் தனுஷ். இந்தப்படத்தை முற்றிலும் இளைஞர்களை கொண்டு இயக்கியுள்ளார். இதனிடையே தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் டி51 படத்தின் சூட்டிங்கில் இணைந்து நடித்து வருகிறார். மும்பையின் தாராவியில் இந்தப் படத்தின் அதிகமான சூட்டிங் நடத்தப்பட உள்ளது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் டைட்டில் தாராவி என்று வைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் அடுத்தடுத்து நடிப்பு, தயாரிப்பு, இயக்கம், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையுடன் கோலிவுட்டில் மட்டுமில்லாமல் டோலிவுட், ஹாலிவுட், பாலிவுட் என வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடந்த மாதம் கேப்டன் மில்லர் படம் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. அடுத்தடுத்து ஓய்வில்லாமல் நடித்து வருகிறார் தனுஷ். கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கை முடித்து கொடுத்துவிட்டு அதற்குள்ளாக அடுத்தடுத்து மூன்று படங்களில் கமிட் ஆகி பணியாற்றி வருகிறார். அடுத்ததாக அவரது டி50 படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
ராயன் படம்: படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்தப் படத்தை இயக்கி படத்தில் முக்கியமான ரோலில் தனுஷ் நடித்துள்ளார். கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் அவருடன் சந்திப் கிஷன் மற்றும் காளிதாஸ் தம்பிகளாக நடித்துள்ளனர். மேலும் படத்தில் எஸ்ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன், துஷாரா விஜயன் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் இயக்குனரும் நடிகருமான தனுஷ் தன்னுடைய twitter பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
ராயன் படத்தில் தனுஷ்: படத்தில் அவர் ரோட்டோர உணவு கடை நடத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது அவரது ஃப்ளாஷ் பேக்கில் கேங்ஸ்டராக அவர் இருந்ததாகவும் அதுகுறித்து குடும்பத்தினர் அறியும்போது ஏற்படும் நிகழ்வுகளும் இந்தப் படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவரது தம்பிகளாக காளிதாஸ் மற்றும் சந்தி கிஷன் நடித்துள்ளனர். மேலும் படத்தில் எஸ்.ஜே. சூர்யா முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தன்னுடைய ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு இருந்த தனுஷ், அடுத்தடுத்த நாட்களில் எஸ்ஜே சூர்யா, செல்வ ராகவன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்களின் கேரக்டர் லுக்குகளை வெளியிட்டு இருந்தார்.
துஷாரா கேரக்டர் லுக்: இந்நிலையில் இன்றைய தினமும் கேரக்டர் அறிமுகம் தொடர்ந்துள்ளது. படத்தில் துஷாரா விஜயனின் கேரக்டர் லுக் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் எளிமையான லுக்கில் அவர் அழுத்தமாக அதே சமயம் மிகவும் சோகமான லுக்கில் இந்த போஸ்டரில் காணப்படுகிறார். வானத்தை நோக்கி அவர் பார்ப்பதாக இந்த லுக் காணப்படுகிறது. ராயனின் உலகத்தில் துஷாரா விஜயன் என்று கேப்ஷனில் தனுஷ் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்திற்கு ராயன் என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில் படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ்: இந்த படத்தை தொடர்ந்து தன்னுடைய டைரக்ஷனில் அடுத்ததாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தின் 70% சூட்டிங்கை நிறைவு செய்துள்ளார் தனுஷ். இந்த படத்தை இயக்கி நடித்து மற்றும் தயாரிக்கவும் செய்துள்ளார். இதனிடையே அடுத்ததாக சேகர் கம்முலா இயக்கத்தில் தன்னுடைய டி51 படத்தில் இணைந்து நடித்து வருகிறார். படத்தில் தனுசுடன் நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். படம் மும்பையை அடிப்படையாகக் கொண்ட கேங்ஸ்டர் படமாக உருவாகி வருகிறது. படத்திற்கு தாராவி என்று பெயரிடப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











