முதல் படம் மாதிரியே பதட்டமா இருக்கு.. தெலுங்கில் முதல் படம் குறித்து தனுஷ் பளிச்!

சென்னை : நடிகர் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் நடிப்பில் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது வாத்தி படம்.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது வாத்தி படம். தெலுங்கில் சார் என்ற பெயரில் ரிலீசாகவுள்ளது.

இந்தப் படத்தின் மூலம் தெலுங்கிலும் தன்னுடைய அறிமுகத்தை கொடுக்கவுள்ளார் தனுஷ். இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா நேற்றைய தினம் ஐதராபாத்தில் நடைபெற்றது.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள வாத்தி படம் நாளைய தினம் ரிலீசாகவுள்ளது. தெலுங்குப்பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் மூலம் தெலுங்கிலும் ஹீரோவாக அறிமுகமாகிறார் தனுஷ்.

 தனுஷின் முதல் தெலுங்கு படம்

தனுஷின் முதல் தெலுங்கு படம்

தமிழில் மட்டுமில்லாமல், பாலிவுட், ஹாலிவுட் என தன்னுடைய எல்லைகளை விரிவுப்படுத்தி தான் தமிழ் நடிகன் இல்லை என்றும் தான் நடிகன் என்றும் தன்னை நிரூபித்தவர் தனுஷ். இவர் அடுத்தடுத்து மீண்டும் பாலிவுட், ஹாலிவுட்டில் கமிட்டாகி வருகிறார். இந்நிலையில் இவருடைய தெலுங்கு படமும் நாளை ரிலீசாகிறது.

ரசிகர்களை கவர்ந்த ட்ரெயிலர்

ரசிகர்களை கவர்ந்த ட்ரெயிலர்

கல்வியின் முக்கியத்துவத்தை பேசும் இந்தப் படத்தில் தனுஷிற்கு சம்யுக்தா ஜோடியாகியுள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் இசை வெளியீடு நடைபெற்ற நிலையில், ட்ரெயிலரும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக வெளியான படத்தின் போஸ்டர்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

தெலுங்கில் பாடிய தனுஷ்

தெலுங்கில் பாடிய தனுஷ்

இந்நிலையில் தெலுங்கில் படத்தின் ரிலீசையொட்டி பிரீ ரிலீஸ் விழா நடத்தப்பட்டது. இதில் தனுஷ், வெங்கி அட்லூரி, சம்யுக்தா உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டு ரசிகர்களிடையே பேசினர். நிகழ்ச்சியில் வா வாத்தி பாடலை தெலுங்கில் பாடி தனுஷ் அசத்தினார். ரசிகர்கள் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர்.

பதட்டத்தை ஏற்படுத்திய சார் படம்

பதட்டத்தை ஏற்படுத்திய சார் படம்

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், கடந்த 2002ம் ஆண்டில் தமிழில் தன்னுடைய முதல் படம் ரிலீசானது என்றும் தற்போது 2023ம் ஆண்டில் தெலுங்கில் தன்னுடைய முதல் படம் ரிலீசாகவுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழில் தன்னுடைய முதல் படம் ரிலீசானபோது இருந்த பதட்டம் தற்போது உருவாகியுள்ளதாகவும் தனுஷ் தெரிவித்தார்.

ரசிகர்கள் ஆச்சர்யம்

ரசிகர்கள் ஆச்சர்யம்

தமிழ் மட்டுமில்லாமல் இந்தி, இங்கிலீஷ் என அடுத்தடுத்த படங்களில் நடித்து வருபவர் தனுஷ். நடிப்பிற்கு மொழி தடையில்லை என்பதை தொடர்ந்து நிரூபித்து வரும் தனுஷ், தெலுங்கில் முதல் படம் சார், தனக்கு பதட்டத்தை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X