Actor Dhanush: உங்களை இயக்குவேன் என கனவிலும்.. நெகிழ்ச்சியை வெளிப்படுத்திய தனுஷ்!
சென்னை: நடிகர் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் பொங்கலையொட்டி வெளியான கேப்டன் மில்லர் படம் அதிரடி சரவடியாக அமைந்திருந்தது. டைரக்டர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சுதந்திரப் போராட்ட த்தை மையமாகக் கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து அசத்தியிருந்தனர். இந்த படத்தை தொடர்ந்து தனது இயக்கத்தில் அடுத்தடுத்த படங்களை இயக்கியுள்ளார் தனுஷ். இதில் D50 படத்திற்கு ராயன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ராயன் படத்தில் எஸ்ஜே சூர்யா, செல்வராகவன் ஆகியோரும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் படம் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் தேதியையொட்டி இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை திட்டமிட தயாரிப்புத் தரப்பு திட்டமிட்டுள்ளது. இதனிடையே இந்தப் படத்தின் பிரமோஷன்களை தற்போது மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தப் படத்தின் ஒவ்வொரு கேரக்டர்களின் போஸ்டரையும் பட குழுவினர் தற்போது வெளியிட்டு வருகின்றனர்.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெற்றி படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்தவகையில் அவரது திருச்சிற்றம்பலம் மற்றும் வாத்தி படங்கள் இரு வேறு வித்தியாசமான ஜானர்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தன. இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து கடந்த மாதம் பொங்கலையொட்டி தனுஷின் கேப்டன் மில்லர் படம் வெளியாகி அசத்தலான வெற்றியை பெற்றுள்ளது. சுதந்திரப் போராட்ட காலத்தை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதைக்களத்தை அமைத்திருந்தார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.
அடுத்தடுத்த படங்கள்: இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து இரு படங்களை தன்னுடைய இயக்கத்தில் மேற்கொண்டார் தனுஷ். இதில் கேங்ஸ்டர் கதைகளத்தில் வடசென்னையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட அவரது டி50 படத்தின் ஷூட்டிங் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு ராயன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் நடிகர் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்தில் தனுஷ் கையேந்தி பவனை நடத்தி வருவதாகவும் அவரது ஃப்ளாஷ்பேக் குறித்து தெரிய வரும்போது அனைவரும் அதிர்ச்சி அடைவதாகவும் படத்தின் கதைகளம் அமைந்துள்ளது.
பர்ஸ்ட் லுக் போஸ்டர்: இந்த படத்தில் அவரது தம்பிகளாக சந்திப் கிஷன் மற்றும் காளிதாஸ் நடித்துள்ளனர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இவர்களும் இணைந்திருந்தனர். படத்தில் அபர்ணா முரளி, துஷாரா விஜயன் ஆகியோரும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தில் எஸ்ஜே சூர்யா மற்றும் செல்வராகவன் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் அவர்களது போஸ்டர்களை அடுத்தடுத்து தனுஷ் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் எஸ்ஜே சூர்யாவின் கேரக்டரை வெளிப்படுத்தும் வகையில் போஸ்டரை வெளியிட்டிருந்தார் தனுஷ்.
செல்வராகவன் கேரக்டர் போஸ்டர்: இந்நிலையில் இன்றைய தினம் தன்னுடைய அண்ணனும் பிரபல இயக்குனருமான செல்வராகவனின் கேரக்டர் போஸ்டரை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார் தனுஷ். அதில் நான் உங்களை இயக்குவேன் என்று நினைத்து பார்த்ததுகூட இல்லை என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இருட்டு பேக்ரவுண்டில் காணப்படும் இந்த போஸ்டரில் மிகவும் அழுத்தமான கேரக்டரை வெளிப்படுத்தும் வகையில் செல்வராகவன் லுக் காணப்படுகிறது. தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் டி51 படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். மும்பையை மையமாகக் கொண்டு கேங்ஸ்டர் கதைக்களத்தில் படம் உருவாகி வருகிறது.
டி51 படம்: படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும் வில்லனாக நாகார்ஜுனாவும் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது இதில் தனுஷ் மற்றும் நாகார்ஜுனா காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு தாராவி என்று பெயரிடப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











