ரூ 100 கோடியை நெருங்கிய கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ பிசினஸ்.. மிரட்டலாக உருவாகும் தனுஷ் படம்!

சென்னை : நடிகர் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு உள்ளாக்கி வருகிறது.

கடந்த ஆண்டில் வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளன.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான அவரது வாத்தி படமும் 100 கோடி கிளப்பில் இணையவுள்ளது.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் தன்னுடைய எல்லைகளை கோலிவுட்டோடு நிறுத்திக் கொள்ளாமல், பாலிவுட், ஹாலிவுட் என விரிவுப்படுத்தியுள்ளார். தொடர்ந்து அவரது நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான வாத்தி படம் தெலுங்கிலும் நேரடியாக சார் என்ற பெயரில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளது.

ரூ.100 கோடியை நெருங்கும் வசூல்

ரூ.100 கோடியை நெருங்கும் வசூல்

இந்தப் படத்தின் வசூல் 8 நாட்களிலேயே 75 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 11 நாட்களில் 85 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் மட்டுமே இந்தப் படம் 30 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. விரைவில் படத்தின் வசூல் 100 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பலம் சேர்த்த ஜிவி பிரகாஷ்

பலம் சேர்த்த ஜிவி பிரகாஷ்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் கல்வியின் தேவை கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. படத்தில் தனுஷிற்கு சம்யுக்தா ஜோடியாகியிருந்த நிலையில், ஜிவி பிரகாஷின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருந்தது. குறிப்பாக வா வாத்தி பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

 கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ்

கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ்

இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படத்தின் சூட்டிங்கை முடித்துவிட்டு தன்னுடைய இயக்கத்தில் டி50 படத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இணையவுள்ளார் தனுஷ்.

 ரூ.100 கோடி வியாபாரம்

ரூ.100 கோடி வியாபாரம்

இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் பிரீ ரிலீஸ் விற்பனை 100 கோடி ரூபாய்களை நெருங்கியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் டிஜிட்டல், சாட்டிலைட் மற்றும் ஓவர்சீஸ் விற்பனை 100 கோடி ரூபாய் எட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் மற்ற மாநிலங்களின் வெளியீட்டு உரிமைகளும் சேரும் நிலையில், இந்த வசூல் மேலும் உயரும் என எதிர்பார்க்கலாம்.

இயக்குநராக களமிறங்கும் தனுஷ்

இயக்குநராக களமிறங்கும் தனுஷ்


நடிகராக தன்னுடைய சிறப்பை எல்லா மொழிகளிலும் வெளிப்படுத்தி வந்தாலும், பாடகராகவும், பாடலாசிரியராகவும் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் தன்னை பல்வேறு தளங்களில் வெளிப்படுத்தி வருகிறார் தனுஷ். அடுத்ததாக அவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் டி50 படத்தை உருவாக்க உள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X