Dhanush :மதுரையில் கேப்டன் மில்லர் சூட்டிங் விறுவிறு.. பொதுமக்களுடன் ஜாக்கிங் சென்ற தனுஷ்!
மதுரை : நடிகர் தனுஷ் லீட் கேரக்டரில் நடித்துவரும் படம் கேப்டன் மில்லர். படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார்.
படத்தில் பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.
படத்தின் சூட்டிங் விறுவறுப்பாக நடைபெற்றுவரும் சூழலில் விரைவில் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளதாகவும் படம், அக்டோபர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதுரையில் ஜாக்கிங் சென்ற நடிகர் தனுஷ் : நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் நடித்துவரும் படம் கேப்டன் மில்லர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான வாத்தி படம் சிறப்பாக கைக்கொடுத்துள்ள நிலையில், தற்போது கேப்டன் மில்லர் படத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்தப் படத்தில் மிரட்டலான நடிப்பை தனுஷ் வழங்கியுள்ளார். பீரியட் படமாக இந்தப் படம் தற்போது உருவாகி வருகிறது.
கோலிவுட்டில் துவங்கிய தனுஷின் பயணம் ஹாலிவுட், பாலிவுட் மற்றும் டோலிவுட் என தனது எல்லைகளை விரிவுப் படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான வாத்தி படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் ரிலீசானது. இந்தப் படமும் தெலுங்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து நல்ல வசூலை பெற்றுள்ளது- இந்நிலையில் தற்போது அவர் நடித்துவரும் கேப்டன் மில்லர் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களையே ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே தனக்கு ஆண் குழந்தை பிறந்ததையொட்டி கேப்டன் மில்லர் சூட்டிங்கில் இருந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டு சென்ற துணிவு பட நடிகர் ஜான் கொக்கென், தற்போது மீண்டும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இதனால் கேப்டன் மில்லர் படத்தின் சூட்டிங் மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. படத்தில் ஜான் கொக்கென், நிவேதிதா சதீஷ், இளங்கோ குமாரவேல், பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வர்ட் உள்ளிட்டவர்களும் இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
படத்தில் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார். இநத்ப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்த மாதத்திலும் அடுத்த மாதத்தில் படத்தின் டீசரும் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தொடர்ந்து படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டும் எதிர்பார்க்கப்படுகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துவரும் கேப்டன் மில்லர் படத்தின் சூட்டிங் தற்போது மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மதுரை சூட்டிங்கில் உள்ள நடிகர் தனுஷ், காலை வேளையில், சாதாரணமாக தெருவில் ஜாக்கிங் சென்றுள்ள வீடியோ தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த வீடியோவில் நீண்ட தாடி, மீசை, தலைமுடியுடன் சாதாரணமாக அவர் ஜாக்கிங் செல்கிறார். வழியில் அவருக்கு கையசைக்கும் ரசிகர்களுக்கும் கையசைத்துவிட்டு அவர் தனது ஜாக்கிங்கை தொடர்கிறார். தற்போது இந்த வீடியோ ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











