என்னய்யா இப்படி ஆகிப்போச்சு..டென்ஷனில் தனுஷ்.. கேப்டன் மில்லர் படத்தின் லீக்கான காட்சி!
சென்னை : தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்திலிருந்து போர்க்காட்சி லீக்கானதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.
நடிகர் தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில், நானே வருவேன் செப்டம்பர் மாதம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது. அந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தி இருந்தார்.
இந்த படத்தைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும், ஒரே நேரத்தில் தயாரான வாத்தி தனுஷ் நடித்திருந்தார். வாத்தி படத்தில் தனுஷ் வாத்தியாராக நடித்திருந்தார். இப்படமும் 100 கோடியை வசூலித்தது.

தனுஷின் கேப்டன் மில்லர்
அடுத்தடுத்து இரு வெற்றிப்படங்களை கொடுத்த தனுஷ் தற்போது, ராக்கி மற்றும் சாணிக் காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரனின் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பான் இந்திய திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தின் அட்டகாசமான மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருந்தது அந்த போஸ்டரில் போராளியாக தனுஷை முகமூடி அணிந்து மோட்டார் பைக்கில் வரும் போஸ்டர் டிரெண்டானது.

முன்னணி தடிகர்கள்
இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வர, சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கென், இளங்கோ குமரவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜெயிலர் படத்தில் நடித்து வரும் புனித் ராஜ்குமாரின் அண்ணன் சிவராஜ்குமார் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். ஜீவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
1930ம் ஆண்டு காலகட்டத்தில் நடக்கும் கதையை மையமாகக் கொண்டு இத்திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் அட்வென்சர் படமாக தயாராக உள்ள இப்படம் தமிழ் சினிமா வரலாற்றிலேயே இதுவரை யாரும் தொடாத ஒரு கதையாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளதால், இப்படமும் தனுஷின் நடிக்கு தீணிப்போடும் படமாகவே இருக்கும் என்ற நம்பப்படுகிறது.

டென்ஷனான தனுஷ்
கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்திலிருந்து முக்கியமான காட்சி ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. படத்திற்கு மிகவும் முக்கியமான காட்சி இணையத்தில் லீக்காகி உள்ளதால், தனுஷ் மிகவும் டென்ஷனாகி உள்ளார். மேலும், இந்த காட்சியை யார் லீக் செய்தார்கள் என்று படக்குழு விசாரணை நடத்தி வருகிறது. மேலும், அந்த காட்சியை படத்தில் இருந்து நீக்கிவிடவும் திட்டமிட்டுள்ளது.

புகாரை மறுத்தார்
முன்னதாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் நடந்து வரும் கேப்டன் மில்லர் படப்பிடிப்பால் வனவிலங்குகளுக்கு பாதிக்கப்படுவதாக எழுந்த புகாரை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் மறுத்திருந்தார். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுவது போல களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் படப்பிடிப்பு நடத்தப்படவில்லை. தனியார் நிலத்தில் நடந்து வருவதாக அருண் மாதேஸ்வரன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











