ரிலீசுக்கு முன்பே சாதனை..மிக அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் கேப்டன் மில்லர்!
சென்னை : தனுஷ் நடிப்பில் உருவாகும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ புதிய சாதனை படைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், கோலிவுட், பாலிவுட், டொலிவுட், ஹாலிவுட் என அனைத்திலும் தடம் பதித்து மாஸ்காட்டி வருகிறார். வாத்தி, நானே வருவேன், திருச்சிற்றம்பலம், கேப்டன் மில்லர் போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
தனுஷ் நடித்த ஹாலிவுட் படமான தி கிரேட் மேன். திரைப்படம் ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதன் பின்னர் ஜூலை 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படுகிறது. இந்த படத்தில் தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார்.

கேப்டன் மில்லர்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்தப் படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் 1930 மற்றும் 40 காலகட்டத்தில் எடுக்கப்படும் படமாகும். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகிறது. இந்தப் படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு நாகூரன் படத்தொகுப்பு செய்கிறார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் படத்திற்கு இசையமைக்கிறார்.

புதிய சாதனை
இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வீடியோ வடிவில் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. ரசிகர்களை கவரும் படி வெளியான இந்த அறிவிப்பு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோ வெளியான 24 மணி நேரத்தில் 5.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த முதல் கோலிவுட் வீடியோ என்ற சாதனையை படைத்துள்ளது.

அதிக பட்ஜெட்டில்
கேப்டன் மில்லர் திரைப்படத்தை பான் இந்திய திரைப்படமாக வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். படத்தின் கதை சர்வதேச சினிமா ரசிகர்களையும் கவரக்கூடும் என்பதால், தயாரிப்பாளர்கள் படத்திற்காக ஒரு பெரிய பட்ஜெட்டை ஒதுக்கியுள்ளனர். தனுஷ் இதுவரை நடித்த படங்களை விட இத்திரைப்படம் அதிக பட்ஜெட்டில் உருவாக உள்ளது.

குவியும் பாராட்டு
இந்தியாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கரண் ஜோஹர், தனது டிவிட்டர் பக்கத்தில் இப்படம் காவியமாக இருக்கப் போகிறது என அறிவிப்பு வீடியோவினை பாராட்டியுள்ளார். இவைதவிர, நாடு முழுவதும் உள்ள பல முன்னணி திரைப்பட இயக்குநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் நடிகர்கள் இந்த அறிவிப்பு வீடியோவினை பகிர்ந்து பாராட்டி வருகின்றனர். நாடு முழுவதும் இந்த வீடியோ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
Recommended Video

திருசிற்றம்பலம்
மேலும் தனுஷ் நடிக்கும் திருசிற்றம்பலம் படத்தில் இசை வெளியீட்டு தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28-ம் தேதி நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குநர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஆகிய 3 கதாநாயகிகள் உள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகவுள்ளது.


Click it and Unblock the Notifications











