twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அப்படி ஒருவர் பிறக்கவே இல்லை.. தனுஷ் விவகாரத்தில் கதிரேசன் வீசும் புது குண்டு!

    போலி ஆவணங்கள் மூலம் உயர் நீதிமன்றத்தை நடிகர் தனுஷ் ஏமாற்றிவிட்டதாக மேலூரைச் சேர்ந்த தம்பதியர் புகார் அளித்துள்ளனர்.

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    தனுஷ் விவகாரத்தில் கதிரேசன் வீசும் புது குண்டு!-வீடியோ

    மதுரை : போலி ஆவணங்கள் மூலம் உயர் நீதிமன்ற மதுரை கிளையை நடிகர் தனுஷ் ஏமாற்றிவிட்டதாக மேலூரைச் சேர்ந்த தம்பதியர் புகார் அளித்துள்ளனர்.

    நடிகர் தனுஷ் மீது மதுரை காவல் நிலையத்தில் மேலூரைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் புகார் அளித்துள்ளார். புகார் அளித்துள்ள கதிரேசன், தனுஷை தமது மகன் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் ஆவார்.

    போலி ஆவணங்கள் மூலம் உயர் நீதிமன்றத்தை நடிகர் தனுஷ் ஏமாற்றிவிட்டதாக அவரைத் தங்கள் மகன் என்று உரிமை கொண்டாடி வரும் தம்பதியர் தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    தனுஷ் தங்கள் மகன் :

    தனுஷ் தங்கள் மகன் :

    மேலூர் அருகே மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியர், நடிகர் தனுஷ் தங்கள் மகன் என உரிமை கோரி வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு தொடர்பாக தனுஷ் தாக்கல் செய்த சான்றிதழ்கள் மூலம், வழக்கு உண்மைக்குப் புறம்பானது எனக்கூறி தள்ளுபடி செய்யப்பட்டது.

    போலி ஆவணங்கள் :

    போலி ஆவணங்கள் :

    இந்நிலையில் மதுரை புதூர் காவல் நிலையில் கதிரேசன் தற்போது அளித்துள்ள புகார் மனுவில், நீதிமன்றத்தில் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் போலியானவை. நாங்கள் அளித்த சான்றிதழ்கள் மட்டுமே உண்மையானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சான்றிதழ் மோசடி :

    சான்றிதழ் மோசடி :

    தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10-ம் வகுப்புச் சான்றிதழ், அரசிதழ், சென்சார் போர்டு சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் போலியானவை என்றும் இவற்றைக் கொண்டு நீதிமன்றமே ஏமாற்றப்பட்டிருப்பதாகவும் அந்தப் புகாரில் தெரிவித்திருக்கிறார்கள்.

    அன்று அப்படி ஒருவர் பிறக்கவே இல்லை :

    அன்று அப்படி ஒருவர் பிறக்கவே இல்லை :

    'சென்னை எழும்பூர் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் பிறந்ததாக தனுஷ் தாக்கல் செய்த சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் விசாரித்ததில் அந்த மருத்துவமனையில் அப்படி ஒருவர் பிறக்கவே இல்லை எனத் தெரியவந்திருக்கிறது. சென்னை மாநகராட்சி இணையதளத்தில் தேடினாலும் இந்த பிறப்புச் சான்றிதழ் எண் வருவதில்லை. எனவே போலியாகத் தயாரிக்கப்பட்டது' எனப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    English summary
    Melur kathiresan has filed a complaint at Madurai police station against actor dhanush. Kathiresan said in the complaint that Dhanush had cheated the court with fake documents.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X