உங்களை போல இயக்குனரை... உங்களை மாதிரி நடிகரை... மாறி மாறிப் புகழும் தனுஷ்- கார்த்திக் சுப்புராஜ்

By

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து விட்டது.

வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி, ஆடுகளம் நரேன் உட்பட பலர் நடித்த படம், 'அசுரன்'. சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தை அடுத்து தனுஷ் நடித்துள்ள பாட்டாஸ் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இதை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்துவந்தார், தனுஷ். இதில் அவர் ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார்.

ஜேம்ஸ் காஸ்மோ

ஜேம்ஸ் காஸ்மோ

பிரேவ் ஹார்ட், டிரைன்ஸ்பாட்டிங், தி கிரோனிக்கல்ஸ் ஆப் நார்னியா, கேம்ஸ் ஆப் த்ரோன் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்த ஜேம்ஸ் காஸ்மோ வில்லனாக நடிக்கிறார். மற்றும் கலையரசன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

லண்டனில் ஷூட்டிங்

லண்டனில் ஷூட்டிங்

ஒய் நாட் ஸ்டூடியோஸ் சார்பில் சஷிகாந்த் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். படத்துக்கு சுருளி என்று டைட்டில் வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அதை தயாரிப்பு தரப்பு மறுத்தது. இந்தப் படத்தின் ஷூட்டிங் லண்டனில் நடந்து வந்தது. அங்கு முடிந்து இந்தியாவில் தொடர்ந்தது.

வேகமாக முடிந்த படம்

வேகமாக முடிந்த படம்

இப்போது இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். நான் நடித்ததிலேயே வேகமாக முடிவடைந்த படம் இதுதான் என்று கூறியுள்ள தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் போன்ற விவேகமான, தொலைநோக்கு பார்வையுடன் கூடிய இயக்குனருடன் பணியாற்றியது மகிழ்ச்சியானது என்று பாராட்டியுள்ளார்.

அற்புதமான நடிகருடன்

அற்புதமான நடிகருடன்

இதையடுத்து, உங்கள் வார்த்தைக்கு நன்று என்று தெரிவித்துள்ள கார்த்திக் சுப்புராஜ், உங்களைப் போன்ற அற்புதமான நடிகருடன் பணியாற்றியது எனக்கும் எங்கள் டீமுக்கும் நல்ல அனுபவமாக இருந்தது என்று புகழ்ந்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X