லண்டன் ஷூட்டிங் ஓவர்... இந்தியாவில் ஸ்டார்ட் ஆகும் தனுஷின் சுருளி!
சென்னை: தனுஷ் நடிக்கும் சுருளி படத்தின் லண்டன் ஷூட்டிங் முடிவடைந்ததை அடுத்து, இந்தியாவில் இதன் தொடங்க இருப்பதாகத் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி, ஆடுகளம் நரேன் உட்பட பலர் நடித்த படம், 'அசுரன்'. சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தை அடுத்து அவர் நடித்துள்ள பாட்டாஸ் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இதை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் சுருளி படத்தில் நடித்துவருகிறார், தனுஷ். இதில் அவர் ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார்.
பிரேவ் ஹார்ட், டிரைன்ஸ்பாட்டிங், தி கிரோனிக்கல்ஸ் ஆப் நார்னியா, கேம்ஸ் ஆப் த்ரோன் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்த ஜேம்ஸ் காஸ்மோ வில்லனாக நடிக்கிறார். மற்றும் கலையரசன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
ஒய் நாட் ஸ்டூடியோஸ் சார்பில் சஷிகாந்த் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதன் ஷூட்டிங் 64 நாட்களாக லண்டனில் நடந்து வந்தது. ஷூட்டிங் முடிந்து படக்குழு திரும்பியது. இப்போது இதன் ஷூட்டிங் இந்தியாவில் தொடங்குகிறது. வரும் 24 ஆம் தேதி இந்த ஷூட்டிங் நடக்க உள்ளதாக தயாரிப்பாளர் சஷிகாந்த் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











