யாரடி நீ மோகினி இயக்குநரின் அடுத்த படைப்பு.. தனுஷின் 44 படத்திற்கு இப்படியொரு தலைப்பா?

சென்னை: திருவிளையாடல் ஆரம்பம் போல இப்போ தனுஷின் 44 படத்திற்கு ஆன்மிக ரீதியான டைட்டிலை படக்குழு வைத்திருக்கிறது.

யாரடி நீ மோகினி படத்தை இயக்கி தனுஷுக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த இயக்குநர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாக உள்ள டி44 படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டது.

படத்தின் டைட்டில் இன்று மாலையே வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அட்டகாசமான டைட்டிலை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

என்ன டைட்டில்

என்ன டைட்டில்

தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள டி44 படத்திற்கு திருச்சிற்றம்பலம் என வித்தியாசமான ஆன்மிக டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வீடியோவுடன் சன் பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டு வைரலாக்கி வருகிறது.

டி44 பூஜை

டி44 பூஜை

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ள டி44 படத்திற்கு திருச்சிற்றம்பலம் என டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்திற்கு இன்று காலை எளிமையான முறையில் பூஜை போடப்பட்டது. பட பூஜையில் நடிகர் தனுஷ் வேட்டி சட்டை அணிந்து கலந்து கொண்டார்.

நித்யா மேனன் மட்டும்

நித்யா மேனன் மட்டும்

திருச்சிற்றம்பலம் படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன், ராஷி கன்னா மற்றும் பிரியா பவானி சங்கர் என மூன்று நாயகிகள் ஜோடி சேர்ந்துள்ள நிலையில், இன்று நடைபெற்ற பூஜையில் நடிகை நித்யா மேனன் மட்டுமே வெள்ளை நிற சுடிதாரில் கலக்கலாக கலந்து கொண்டார்.

பிரகாஷ் ராஜ் ட்வீட்

பிரகாஷ் ராஜ் ட்வீட்

வொண்டர்ஃபுல் ப்ரீஸி படமான டி44 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. திறமை வாய்ந்த தனுஷ், அனிருத், மித்ரன் ஜவகர், பாரதிராஜா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா மற்றும் சன் பிக்சர்ஸ் உடன் இணைந்து பணியாற்றுவதில் பெரு மகிழ்ச்சி என பிரகாஷ் ராஜ் ட்வீட் போட்டுள்ளார்.

தனுஷுக்கு சங்கடம்

தனுஷுக்கு சங்கடம்

ஒரு பக்கம் டி44 படத்தின் பட பூஜையில் சந்தோஷமாக கலந்து கொண்ட நடிகர் தனுஷுக்கு மறு பக்கம் ரோல்ஸ் ராய்ஸ் கார் வழக்கில் எதிராக தீர்ப்பு வந்து சங்கடத்தை கொடுத்தது. தனுஷ் ரசிகர்கள் டி44 டைட்டிலுக்காக ஹாஷ்டேக் டிரெண்ட் செய்ய சிம்பு ரசிகர்கள் வரி கட்டுங்க தனுஷ் ஹாஷ்டேக்கை வைரலாக்கினர்.

திருவிளையாடல் ஆரம்பம்

திருவிளையாடல் ஆரம்பம்

இயக்குநர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான படம் திருவிளையாடல் ஆரம்பம். முதலில் திருவிளையாடல் என்கிற பெயரே அந்த படத்திற்கு வைக்க படக்குழு ஏற்பாடு செய்தது. ஆனால், அதற்கு சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே திருவிளையாடல் ஆரம்பம் என டைட்டில் மாற்றப்பட்டது.

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்

இந்நிலையில், மீண்டுமொரு ஆன்மிக டைட்டிலாக திருச்சிற்றம்பலம் என்கிற டைட்டிலில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார். இந்த படமும் திருவிளையாடல் ஆரம்பம் போலவே பக்கா கமர்ஷியல் என்டர்டெயினராக உருவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரகாஷ் ராஜும் படம் எப்படி இருக்கும் என தனது ட்வீட் மூலம் பக்கா ஹின்ட் கொடுத்திருக்கிறார்.

Recommended Video

Dhanush -யை வெச்சி செய்த நீதிபதி 2 நாளில் 30 லட்சம் கட்டுங்க! | Thalapathy Vijay, Rolls Royce
யாரடி நீ மோகினி இயக்குநர்

யாரடி நீ மோகினி இயக்குநர்

2008ம் ஆண்டு இயக்குநர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ், நயன்தாரா நடிப்பில் வெளியான படம் யாரடி நீ மோகினி. நடிகர் தனுஷுக்கு மிகப்பெரிய வெற்றியை அந்த படம் கொடுத்தது. காமெடி, காதல் கலந்த கமர்ஷியல் என்டர்டெயினராக அந்த படம் அமைந்திருந்தது. தற்போது அதே போல ஒரு படத்தை ரசிகர்கள் மித்ரன் ஜவகரிடம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தெறிக்கும் இசை

தெறிக்கும் இசை

அனிருத் மீண்டும் தனுஷ் உடன் இணைந்து இந்த படத்திற்கு இசையமைக்க உள்ள நிலையில், பாடல்கள் மீதும் தனுஷ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் உடன் கூட்டணி வைத்து வந்த நடிகர் தனுஷ் அனிருத் உடன் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

ரசிகர்கள் மகிழ்ச்சி

நடிகர் தனுஷ் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கார் தொடர்பான வழக்கில் நடிகர் தனுஷுக்கு எதிராக தீர்ப்பு வெளியான நிலையில், சோகத்தில் இருந்த தனுஷ் ரசிகர்களை சன் பிக்சர்ஸ் உடனடியாக அப்டேட்களை கொடுத்து கொண்டாட்ட மோடுக்கு மாற்றி உள்ளது. மீண்டும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தனுஷ் ரசிகர்களின் கை ஓங்கி இருக்கிறது. தனுஷின் திருவிளையாடலை பார்த்து விட்டோம்.. திருச்சிற்றம்பலத்தையும் காண தயாராக வேண்டியது தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X