அடுத்தடுத்த 100 கோடி வசூல் படங்கள்.. ராக்கிங்கில் தனுஷ்.. ரசிகர்கள் உற்சாகம்!
சென்னை : நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
கோலிவுட்டில் ஆரம்பித்த அவரது பயணம் தற்போது டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் வரை நீண்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான வாத்தி படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது.

நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் பள்ளி மாணவராகத்தான் தன்னுடைய திரையுலகப் பயணத்தை துவக்கினார். தன்னுடைய தந்தையின் இயக்கத்தில் நடிக்கத் துவங்கி, தொடர்ந்து தன்னுடைய அண்ணனின் இயக்கத்திலும் இணைந்து வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் தனுஷ். படத்திற்கு படம் தன்னுடைய நடிப்பு மிளிரும் வகையில் தன்னை உயர்த்திக் கொண்டு வருகிறார்.

விரிவடையும் திரைப்பயணம்
கோலிவுட்டில் துவங்கிய தனுஷின் பயணம் அடுத்தடுத்து பாலிவுட், ஹாலிவுட் என விரிவடைந்து தொடர்ந்து தற்போது டோலிவுட்டிலும் தன்னுடைய அறிமுகத்தை துவக்கியுள்ளார். வெங்கி அட்லூரி இயக்கத்தில் சமீபத்தில் தமிழ், தெலுங்கில் வெளியான தனுஷின் வாத்தி படம், தெலுங்கில் சார் என ரிலீசானது.

வாத்தி படம்
இந்தப் படம் தெலுங்கில் வெளியான முந்தைய படங்களின் வசூலை முறியடித்து தற்போது 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. மேலும் தனுஷின் அடுத்தடுத்தப் படங்கள் தற்போது முன் தயாரிப்பு பணிகளில் உள்ளது. தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.

டி50 படத்தை இயக்கும் தனுஷ்
இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய டி50 படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. நடிப்பு, பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் இவற்றுடன் இயக்குநர் என்ற அந்தஸ்தையும் தனுஷ் பெற்றுள்ளார்.

தனுஷின் 100 கோடி கிளப் படங்கள்
தற்போது வெளியான வாத்தி படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ள நிலையில், முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான திருச்சிற்றம்பலம், அசுரன், ராஞ்சனா போன்ற படங்களும் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த தனுஷின் படங்களாக உள்ளன. பாக்ஸ் ஆபிசில், கோலிவுட்டில் மட்டுமில்லாமல் டோலிவுட், பாலிவுட் என தனுஷின் 100 கோடி ரூபாய் படங்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன.


Click it and Unblock the Notifications











