அடடா.. தீயா வேலை பார்க்குறாங்களே.. கர்ணன் படத்தின் டப்பிங் பணிகள் முடிந்ததாம்!
சென்னை: தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தின் டப்பிங் பணிகள் கிட்டதட்ட முடிந்துவிட்டதாக தயாரிப்பாளர் தானு தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'கர்ணன்'. இதில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இந்தப் படத்தை தாணு தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ஷூட்டிங் நிறைவு
திருநெல்வேலி அருகே கிராமம் போன்ற செட் அமைத்து படத்தின் பெரும்பகுதி படமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 9 ஆம் தேதியுடன் இத்திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்தது.

போஸ்ட் புரடெக்ஷன்
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு
இத்திரைப்படம் வரும் ஏப்ரல் மாதத்தில் திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அண்மையில் அறிவித்தது. இதற்காக ஸ்பெஷல் டீசர் வெளியிடப்பட்டது. அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
டப்பிங் பணிகள் நிறைவு
இந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் கிட்டதட்ட முடிந்துவிட்டதாக படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தானு தெரிவித்துள்ளார். மேலும் தனுஷ் சிறப்பாக செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ள தானு, தனுஷ் டப்பிங் பேசும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
தலைவன் க்யூட்
தானு ஷேர் செய்துள்ள ரசிகர்கள் தனுஷ் செம க்யூட்டாக இருப்பதாக புகழ்ந்து வருகின்றனர். தனுஷின் போட்டோவை பார்த்த இந்த ரசிகர், தலைவன், க்யூட்னஸ் ஓவர்லோடட் என்று புகழ்ந்துள்ளார்.
ஆஸ்கருக்கு தயார்
மற்றொரு ரசிகரான இவர், கர்ணன் பிளாக்பஸ்டர் ஹிட்டுக்காக வெயிட்டிங்.. படத்துல தனுஷ் அண்ணாவின் நடிப்பு மிரட்ட போகுது. ஆஸ்கருக்கு தயார் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











