சிம்புவுடன் மோதும் தனுஷ்.. ட்ரீட்டுக்கு தயாராகும் ரசிகர்கள்!

சென்னை : நாளைய தினம் சர்வதேச அளவில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் ரிலீசாக உள்ளது.

இந்தப் படத்தின் பாடல்கள், டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

இதனிடையே தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. 100 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்து வெற்றிநடை போட்டு வருகிறது.

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு

நடிகர் சிம்புவின் மாநாடு படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த ஆண்டின் இறுதியில் வெளியானது. இந்தப் படத்தின் டைம் லூப் பாணியிலான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் தமிழுக்கு புதுசு என்பதால் இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். படம் 100 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்தது.

சிம்புவின் அடுத்தடுத்த படங்கள்

சிம்புவின் அடுத்தடுத்த படங்கள்

இந்தப் படத்தை தொடர்ந்து சிம்புவின் நடிப்பில் மஹா படம் வெளியான நிலையில் அந்தப் படம் ரசிகர்களை அதிகமாக கவரவில்லை. படத்திலும் கேமியோ ரோலில்தான் நடித்திருந்தார் சிம்பு. தொடர்ந்து வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல போன்ற படங்களில் நடித்துவந்தார் சிம்பு.

வெந்து தணிந்தது காடு படம்

வெந்து தணிந்தது காடு படம்

இந்நிலையில் நாளைய தினம் அவரது வெந்து தணிந்தது காடு படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. ஐசரி கணேஷின் வேல்ஸ் இன்டர்நேஷனல் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. கௌதம் மேனன் இந்தப் படத்தின்மூலம் சிம்புவுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார்.

ஹாட்ரிக் வெற்றிக்கு காத்திருப்பு

ஹாட்ரிக் வெற்றிக்கு காத்திருப்பு

இந்தப் படம் ஹாட்ரிக் வெற்றியடையும் என்று படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவற்றை பார்த்த விமர்சகர்கள், ரசிகர்கள் ஆகியோர் உறுதியாக கூறிவருகின்றனர். படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடுகள் சிறப்பாக நடைபெற்று வரும்நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து காணப்படுகிறது.

நானே வருவேன் படத்தின் டீசர்

நானே வருவேன் படத்தின் டீசர்

இந்நிலையில் நாளைய தினம் இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில் அவர் எப்படி சோலாவாக களத்தில் இறங்கலாம் என்று நினைத்தாரோ என்னவோ தன்னுடைய நானே வருவேன் படத்தின் டீசரை நாளைய தினம் வெளியிடவுள்ளார் தனுஷ். தனுஷின் சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்த மாத இறுதியில் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரட்டை கெட்டப்பில் தனுஷ்

இரட்டை கெட்டப்பில் தனுஷ்

நானே வருவேன் படத்தின் பாடல், போஸ்டர்கள் உள்ளிட்டவை முன்னதாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், தற்போது படத்தின் டீசரும் நாளைய தினம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஹீரோ -வில்லன் என இரட்டை கெட்டப்புகளில் தனுஷ் நடித்துள்ளார்.

தனுஷின் திருச்சிற்றம்பலம்

தனுஷின் திருச்சிற்றம்பலம்

இந்தப் படத்தில் இந்துஜா நாயகியாக இணைந்துள்ளார். கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் படம் உருவாகியுள்ளது. முன்னதாக தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் கடந்த மாதம் 18ம் தேதி ரிலீசாகி 13 நாட்களிலேயே 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது. தனுஷ் மற்றும் நித்யா மேனனின் நடிப்பு இந்தப் படத்தில் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

செல்வராகவன் -தனுஷ் கூட்டணி

செல்வராகவன் -தனுஷ் கூட்டணி

இதனிடையே அவரது அடுத்தப் படமான நானே வருவேன் படமும் வெற்றியை பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலங்களுக்கு பிறகு இந்தப் படத்தின் மூலம் தன்னுடைய சகோதரர் இயக்குநர் செல்வராகவனுடன் தனுஷ் இணைந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X