பொன்னியின் செல்வனோட போட்டிப் போட்டா மட்டும் போதுமா.. பிரமோஷன் வேணாமா.. தனுஷிடம் ரசிகர்கள் கேள்வி!

சென்னை : நடிகர் தனுஷ் இரண்டு வேடங்களில் நடிக்க உருவாகியுள்ள நானே வருவேன் படம் வரும் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

பொன்னியின் செல்வன் படம் மிகவும் பிரம்மாண்டமாக செப்டம்பர் 30ம் தேதி ரிலீசாக உள்ளது.

அதன் பிரமோஷன்கள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஒரு பக்கம் படக்குழு பிரமோஷனல் டூரிலும் ஈடுபட்டுள்ளது.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. இந்தப் படத்தின் திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எளிமையான கதையை எடுத்துக் கொண்டு அதை சிறப்பான திரைக்கதையால் மித்ரன் ஜவஹர் வெற்றிப் படமாக்கியுள்ளார்.

தனுஷ் உற்சாகம்

தனுஷ் உற்சாகம்

இந்தப் படத்தின் வெற்றி தனுஷை மட்டுமில்லாமல் அவரது ரசிகர்களையும் வெகுவாக உற்சாகப்படுத்தியுள்ளது. அவரது அடுத்தடுத்த 4 படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியான நிலையில், திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் வெளியானதுடன் சூப்பர் வெற்றியையும் தந்துள்ளது.

நானே வருவேன் படம்

நானே வருவேன் படம்

இதனிடையே தனுஷின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாக உள்ளன. தனுஷ் அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நீண்ட காலங்களுக்கு பிறகு இந்தப் படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படம் வரும் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அவரது வாத்தி படமும் தமிழ், தெலுங்கில் இருமொழிப் படமாக டிசம்பர் 2ம் தேதி ரிலீசாகவுள்ளது.

இரட்டை வேடங்களில் தனுஷ்

இரட்டை வேடங்களில் தனுஷ்

இதில் நானே வருவேன் படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் தனுஷ். படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்நிலையில் இந்தப் படம் மணிரத்னத்தின் பிரம்மாண்டமான படைப்பான பொன்னியின் செல்வன் படத்துடன் மோதவுள்ளது ரசிகர்களை கேள்வி கேட்க வைத்துள்ளது.

சிறப்பான பிரமோஷன்கள்

சிறப்பான பிரமோஷன்கள்

பொன்னியின் செல்வன் படம் மிகவும் பிரம்மாண்டமாக சோழர்களின் வரலாற்றை பேசும் படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷன்களும் மிகவும் பிரம்மாண்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, மணிரத்னம் என இந்தப் படத்திற்காக பிரமோஷனல் டூரிலும் பங்கேற்று வருகின்றனர்.

பிரமோஷன் இல்லாத தனுஷ் படம்

பிரமோஷன் இல்லாத தனுஷ் படம்

இந்நிலையில் தனுஷின் நானே வருவேன் படம் எந்தவிதமான பிரமோஷனும் இல்லாமல் ரிலீஸ் குறித்த அறிவிப்பையும் செய்யலாமா வேண்டாமா, சரியாக வருமா என்ற சந்தேகத்துடனேயே வெளியானது. தனுஷ் -செல்வராகவன் -யுவன் என்ற சிறப்பான கூட்டணியுடன் இந்தப் படம் உருவாகியுள்ளது மட்டுமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

ரசிகர்கள் கேள்வி

ரசிகர்கள் கேள்வி

ஆனால் இதுமட்டுமே போதுமா என்ற கேள்வியை இந்தப் படம் ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் தனது படங்களின் பிரமோஷன்களை அதிகமாக செய்யாமல் இருக்கும் வழக்கத்தை பின்பற்றி வரும் தனுஷ், இந்தப் படத்தின் ரிலீசையாவது தள்ளி வைத்திருக்கலாம் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.

பிரம்மாண்ட படைப்பு

பிரம்மாண்ட படைப்பு

பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் படைப்பு, லைகா தயாரிப்பு, பிரமாதமான பிரமோஷன்கள், சமூக வலைதளங்களையும் கச்சிதமாக பயன்படுத்தி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருவது, படத்தின் வரலாற்று கேரக்டர்களின் போஸ்டர்கள் என மிரட்டி வருகிறது பொன்னியின் செல்வன்.

குழப்பத்தில் ரசிகர்கள்

குழப்பத்தில் ரசிகர்கள்

இந்தப் படத்துடன் மோதுவதற்கு தனுஷ் -செல்வராகவன் -யுவன் கூட்டணி என்ற எதிர்பார்ப்பு மட்டுமே போதுமா என்ற கேள்வியை தற்போது இந்தப் படம் ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் நானே வருவேன் ரிலீசாகவுள்ள நிலையில், இந்தப் படம் பொன்னியின் செல்வனை மீறி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X