வெறித்தனம் வெறித்தனம்.. பட்டையை கிளப்பும் வாத்தி.. 8ம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை : தனுஷ் நடித்த வாத்தி திரைப்படம் வெளியாகி எட்டு நாட்கள் ஆகி உள்ள நிலையில், உலகம் முழுவதும் மகத்தான வசூலை வாரிக்குவித்து வருகிறது.
தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம்,அட்ராங்கி ரே, மாறன் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியானாலும் எதிர்பார்த்த வெற்றியை பெற்று தராததால், அடுத்து நிச்சயம் ஒரு வெற்றிப்படத்தை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.
இதையடுத்து, மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படமும், செல்வராகவனின் நானே வருவேன் படமும் வெளியாகி வசூலை வாரிக்குவித்தது.

தனுஷின் வாத்தி
திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்களின் வெற்றிக்கு பின் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்த வாத்தி திரைப்படம் திரையரங்கில் பிப்ரவரி 17ந் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியான இப்படத்திற்கு தமிழில் வாத்தி என்றும்,தெலுங்கில் சார் என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

பாடல்கள் ஹிட்
கல்வி வியாபாரமாகி வருவதை மையக்கருவாக வைத்து படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தனுஷ் வாத்தியாராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சம்யுக்தாவும், வில்லனாக சமுத்திரக்கனியும் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் படம் வெளியாவதற்கு முன்பே மிகப்பெரிய அளவில் ஹிட்டாகின.

பட்டையை கிளப்பும் வசூல்
வாத்தி படம் முதல் நாளில் ரூ.14 கோடி, இரண்டாம் நாளில் ரூ.20 கோடியை வசூலித்ததாக கூறப்பட்ட நிலையில், எட்டாம் நாளான இன்று உலகம் முழுவதும் ரூ75 கோடியை வசூலித்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனை தனுஷின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கேப்டன் மில்லர்
வாத்தி படத்தை தொடர்ந்து அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் தனுஷின் வித்யாசமான நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது. 1930 சுதந்திர காலக்கட்டத்தில் நடக்கும் கதை அம்சத்தை கொண்ட இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ளது. கேப்டன் மில்லர் படத்தின் மீது ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.

தீபாவளிக்கு ரிலீஸ்ஸா?
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசைத்து வருகிறார். பிரியங்கா மோகன் சந்தீப் கிஷன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கேப்டன் மில்லர் படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











