Don't Miss!
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- News
முதல்வர் ஸ்டாலின் மிக நாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.. அவரை பாராட்டுகிறேன்.. கே.எஸ்.அழகிரி பேட்டி!
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
இந்திய நடிகர்களுக்கு ஹாலிவுட்டில் அதிக சான்ஸ் கிடைக்க தனுஷ் செய்த விஷயம்.. என்ன தெரியுமா?
சென்னை : நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக தி க்ரே மேன் ஹாலிவுட் படம் இரு தினங்களில் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
இதையடுத்து அமெரிக்காவில் நடைபெற்றுவரும் ப்ரமோஷன்களில் தனுஷ் பங்கேற்று வருகிறார்.
தன்னுடைய மகன்களுடன் இந்த பயணத்தில் அவர் கலந்துக் கொண்டார்.
சமந்தாவை அலேக்காக தூக்கிய அக்ஷய் குமார்.. எப்படியெல்லாம் வளைச்சு வளைச்சு சுத்துறாரு பாருங்க!

நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் தமிழ், தெலுங்கு, இந்தி மட்டுமில்லாமல் ஹாலிவுட்டிலும் தன்னுடைய எல்லைகளை விரிவுப்படுத்திக் கொண்டுள்ளார். தன்னுடைய படங்களில், கேரக்டர்களில் அடுத்தடுத்து வித்தியாசங்களை காட்டி வருபவர். பள்ளி மாணவனாக தோன்றும் இவர் அசுரன் போன்ற படங்களில் வயதான தோற்றங்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.

தனுஷ் என்றால் வித்தியாசம்
தனுஷ் என்றாலே வித்தியாசம் தான் என்பது எழுதப்படாத சட்டமாக மாறியுள்ளது. தொடர்ந்து இதில் கவனம் செலுத்திவரும் தனுஷ், தமிழில் மட்டுமே தன்னை முடக்கிக் கொள்ளாமல் டோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தனது ஹாலிவுட் பயணத்தை கடந்த 2018லேயே இவர் துவங்கினார்.

தி க்ரே மேன் படம்
கடந்த 2018ல் இவரது நடிப்பில் தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் பகிர் என்ற ஹாலிவுட் படம் வெளியானது. இதனிடையே வரும் 22ம் தேதி இவரது தி க்ரே மேன் படம் நெட்பிளிக்சில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் தனுஷின் சண்டைக் காட்சிகள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

எந்த தயக்கமும் இல்லை
அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய இரட்டையர்கள் ரூசோ சகோதரர்களின் இயக்கத்தில் தி க்ரே மேன் படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் முதல்காட்சியில் நடித்தது குறித்து தற்போது பேட்டியொன்றில் பேசியுள்ளார் தனுஷ். இந்தப் படத்தில் தான் மிகவும் உற்சாகமாவே நடித்ததாகவும் தனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை என்றும் தனுஷ் கூறியுள்ளார்.

தனக்கான பொறுப்பு
தற்போதுதான் இந்திய நடிகர்களை ஹாலிவுட் திரும்பி பார்க்கத் துவங்கியுள்ளதை சுட்டிக் காட்டிய அவர், அதனால் தன்னுடைய முழுமையான திறமையை இந்தப் படத்தில் வெளிக்காட்ட வேண்டிய பொறுப்பு தனக்கு இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் ஹாலிவுட்டிலிருந்து இந்திய நடிகர்களுக்கு அதிகமான அழைப்பு எதிர்காலத்தில் வருவதற்கு தான் காரணமாக அமைய வேண்டும் என்று தான் நினைத்ததாகவும் கூறியுள்ளார்.
Recommended Video

ஈர்க்கும் சண்டைக் காட்சிகள்
இதை மட்டுமே மனதில் வைத்து தான் நடித்ததாகவும் மற்றபடி ரூசோ சகோதரர்களுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் எளிமையாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தில் தனுஷின் கேரக்டர் சிறியதாக இருந்தாலும் அனைவரையும் ஈர்க்கும் வகையில் சண்டைக்காட்சிகள் அமைந்துள்ளன.