தாய்கிழவிக்கு புதிய விளக்கம் கொடுத்த தனுஷ்.. வெளியானது திருச்சிற்றம்பலம் படத்தின் பாடல்!

சென்னை : நடிகர் தனுஷ், பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் திருச்சிற்றம்பலம்.

இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ், பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் திருச்சிற்றம்பலம். மாறன், கலாட்டா கல்யாணம், ஜகமே தந்திரம் என அடுத்தடுத்த தனுஷ் படங்கள் ஓடிடியில் வெளியான நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தனுஷின் அடுத்தடுத்த படங்கள்

தனுஷின் அடுத்தடுத்த படங்கள்

முன்னதாக தனுஷின் கலாட்டா கல்யாணம், ஜகமே தந்திரம் மற்றும் மாறன் படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றன. இதனால் அவர் திருச்சிற்றம்பலத்தில் தன்னுடைய சிறப்பான வெற்றியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்நிலையில் இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு

நீண்ட நாட்களாக இந்தப் படத்தின் ரிலீசை தனுஷின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பீஸ்ட் படத்தை தொடர்ந்து இந்தப் படத்தை தற்போது சன் பிச்சர்ஸ் தயாரித்து ரிலீஸ் செய்யவுள்ளது. பீஸ்ட் படம் சிறப்பான வசூலை பெற்றுத் தந்துள்ள நிலையில் திருச்சிற்றம்பலம் எந்த மாதிரி அமையும் என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

சிறப்பான கேரக்டர்கள்

சிறப்பான கேரக்டர்கள்

தனுஷ் எப்போதுமே தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்யும் வகையில் நடிப்பார். அசுரன் என்ற படத்தில் வயதான கேரக்டரில் நடித்ததும், தற்போது மாறன், கலாட்டா கல்யாணம் போன்ற படங்களில் ஜாலியான கேரக்டர்களில் நடித்ததும் அவருக்கு சிறப்பாக அமைந்தது.

லண்டன் தாதா

லண்டன் தாதா

இதேபோல ஜகமே தந்திரத்தில் லண்டனில் தாதா கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்தார். படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் தனுஷின் சிறப்பான நடிப்பு இந்த படங்களுக்கு பலத்தை சேர்க்கவே செய்துள்ளன. இந்நிலையில் தற்போது திருச்சிற்றம்பலம் படத்தில் ஸ்விக்கி போன்ற தளத்திற்காக உணவு சப்ளை செய்யும் நபராக நடித்துள்ளார்.

தாய்கிழவி பாடல்

சமீபத்தில் இந்தப் படத்தின் கேரக்டர்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிமுகம் செய்திருந்தார் தனுஷ். இந்நிலையில் தற்போது தாய்கிழவி என்ற படத்தின் பாடல் வெளியாகியுள்ளது. அன்பில் தாய் மற்றும் அறிவில் கிழவி என்று நாட்டாமை படத்தின் இந்த வார்த்தைக்கு புதிய விளக்கம் கொடுத்துள்ளார் தனுஷ். நன்றாகவே இருக்கிறது.

பாடலை எழுதிய தனுஷ்

பாடலை எழுதிய தனுஷ்

படத்தில் தனுஷ் காதலியாக பிரியா பவானி சங்கரும், தோழியாக நித்யா மேனனும் நடித்துள்ள நிலையில், இந்தப் பாடலில் இருவருமே காணப்படுகின்றனர். அனிருத் இசையில் பாடல் லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ளது. பாடலுக்கு லிரிக்ஸ் எழுதி அதை பாடவும் செய்துள்ளார் தனுஷ். முன்னதாக இந்தப் பாடலுக்கு சிறப்பான பிரமோஷன் கொடுக்கப்பட்டிருந்தது.

இயல்பான கேரக்டர்

இயல்பான கேரக்டர்

இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே சிறப்பான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. தனுஷ் இயல்பான கேரக்டர்களில் நடித்து வெளியான படங்கள் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ள நிலையில் தற்போது இந்தப் படத்திலும் அவர் அத்தகைய கேரக்டரில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X