118 கோடிகளை அள்ளிய வாத்தி படம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. தனுஷின் கேரியர் பெஸ்ட்!

சென்னை : நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்ற படம் வாத்தி.

தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இந்தப் படத்தை வெங்கி அட்லூரி இயக்கியிருந்தார். படத்தில் சம்யுக்தா -தனுஷ் ஜோடியாக நடித்திருந்தனர்.

கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்திய இந்தப் படம், பீரியட் படமாக வெளியான போதிலும் தற்போதைய சூழலுக்கும் பொருந்துவதாக அமைந்திருந்தது.

தனுஷின் வாத்தி படம்

தனுஷின் வாத்தி படம்

நடிகர் தனுஷ், சமுத்திரக்கனி, சம்யுக்தா உள்ளிட்டவர்கள் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது வாத்தி படம். தெலுங்கில் சார் என்ற பெயரில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின்மூலம் தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகியுள்ளார் தனுஷ். இந்தப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல விமர்சனங்களை பெற்றதுடன் சிறப்பான வசூலையும் பெற்றுள்ளது. படத்தின் சக்சஸ் மீட்டும் சிறப்பாக நடத்தப்பட்டது.

ரசிகர்களை கவர்ந்த பாடல்கள்

ரசிகர்களை கவர்ந்த பாடல்கள்

ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் படத்தின் பாடல்களும் சிறப்பான வரவேற்பை பெற்றது. குறிப்பாக வாத்தி பாடல் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்தப் படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் பாலமுருகன் கேரக்டரை ஓடிடியில் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ரசிகர்கள் இந்தப் படத்தை குடுமபத்துடன் பார்ப்பார்கள் என்று படத்தின் இயக்குநரும் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்த வெற்றிகள்

அடுத்தடுத்த வெற்றிகள்

தனுஷின் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், இந்த ஆண்டின் துவக்கத்திலேயே தனுஷின் வாத்தி படம் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்தப்படம் சர்வதேச அளவில் இதுவரை 118 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளதாக தயாரிப்பு தரப்பு தற்போது அப்டேட்டும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளது. மேலும் இந்தப்படம் தற்போது தனுஷின் கேரியர் பெஸ்ட் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

வாத்தி வசூல் சாதனை

வாத்தி வசூல் சாதனை

அடுத்தடுத்து திருச்சிற்றம்பலம் மற்றும் வாத்தி படங்கள் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளன. சாதாரண பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தனுஷின் வாத்தி படம் இந்த அளவிற்கு வசூல் சாதனை படைத்துள்ள நிலையில், பிரம்மாண்டமாக பான் இந்தியா படமாக உருவாகிவரும் கேப்டன் மில்லர் படம் எந்த அளவிற்கு தாக்கத்தையும் வசூலையும் குவிக்கும் என்று தற்போதே ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

படப்படப்பை ஏற்படுத்தி சார் படம்

படப்படப்பை ஏற்படுத்தி சார் படம்

தமிழில் மட்டுமில்லாமல், பாலிவுட், ஹாலிவுட் என தன்னுடைய நடிப்பின் எல்லைகளை விரிவுப்படுத்தியுள்ளார் நடிகர் தனுஷ். தற்போது சார் படம் மூலம் டோலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். அவரது முதல் படமே சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. முன்னதாக, தான் துள்ளுவதோ இளமை படத்தின்போது இருந்த படபடப்பு இந்தப் படத்தின் தெலுங்கு ரிலீசின்போதும் இருந்ததாக தனுஷ் தெரிவித்திருந்தார்.

கேப்டன் மில்லர் குறித்து எதிர்பார்ப்பு

கேப்டன் மில்லர் குறித்து எதிர்பார்ப்பு

அடுத்ததாக கேப்டன் மில்லர் படம் தனுஷ் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகிவரும் சூழலில், தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக தன்னுடைய டி50 படத்தை இயக்கி நடிக்கவுள்ளார் தனுஷ். முன்னதாக இவரது இயக்கத்தில் வெளியான ப பாண்டி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், டி50 படம் எந்த அளவில் ரசிகர்களை கவரும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X