25வது நாள் கொண்டாட்டத்தில் வாத்தி.. தனுஷின் கேப்டன் மில்லருக்கு எகிறும் எதிர்பார்ப்பு!
சென்னை : நடிகர் தனுஷ், சம்யுக்தா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த மாதத்தில் வெளியான வாத்தி படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிப்படமாக மாறியது.
கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழ், தெலுங்கில் வெளியான இந்தப் படத்தை தெலுங்கு பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியிருந்தார்.
திருச்சிற்றம்பலம் படத்தை தொடர்ந்து வாத்தி படமும் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து தனுஷிற்கு சிறப்பாக கைக்கொடுத்தது.

நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ், சம்யுக்தா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த மாதத்தில் தமிழ், தெலுங்கில் வாத்தி மற்றும் சார் என்ற பெயரில் வெளியானது வாத்தி படம். இந்தப் படத்தை தெலுங்குப்பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியிருந்தார். இந்தப் படம் தனுஷ் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் சிறப்பாக கைக்கொடுத்து 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது. கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம் சில விஷயங்களை அதிரடியாக கேள்விக்குட்படுத்தியது.

வாழ்க்கை மாற்றம்
தன்னுடைய சிறப்பான நடிப்பை இந்தப் படத்தில் தனுஷ் வெளிப்படுத்தியிருந்தார். அவருக்கு ஈடுகொடுத்து சம்யுக்தா, சமுத்திரக்கனி உள்ளிட்டவர்களும் நடித்திருந்தனர். கிராமத்து மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அதை கதைக்களமாக கொண்டு இந்தப் படத்தின் கதை உருவாகியிருந்தது. விளையாட்டுத்தனமாக இருக்கும் தனுஷின் வாழ்க்கை எப்படி மாறுகிறது, எந்த சூழல் அவரது வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வருகிறது என்பதாக இந்தக் கதை இருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தமிழில் தனுஷ் என்ட்ரி
தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் ஒரே நேரத்தில் வெளியான நிலையில், சார் என்ற பெயரில் படம் தெலுங்கில் ரிலீசானது. இந்தப் படத்தின்மூலம் முதல்முறையாக தெலுங்கிலும் நேரடியாக அறிமுகமானார் தனுஷ். அவருக்கு தெலுங்கிலும் இந்தப் படம் சிறப்பாக கைக்கொடுத்து வசூலிலும் மிரட்டி வருகிறது. சில நாட்களிலேயே படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த நிலையில் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதையொட்டி படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

25வது நாள் கொண்டாட்டம்
இந்நிலையில் இந்தப் படத்தின் 25வது நாள் கொண்டாட்டத்தை படக்குழுவினர் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். முன்னதாக கடந்த ஆண்டில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான திருச்சிற்றம்பலம் படமும் நீண்ட காலங்களுக்கு பிறகு தனுஷ் நடிப்பில் வெற்றிக்கொடி நாட்டியது. 100 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்தது.

கேப்டன் மில்லர் படத்திற்கு எதிர்பார்ப்பு
இந்நிலையில் இடையில் வெளியான தனுஷ் -செல்வராகவன் காம்பினேஷன் படமான நானே வருவேன் விமர்சனரீதியாகவும் வசூலிலும் சொதப்பிய நிலையில், அடுத்ததாக வெளியாகியுள்ள வாத்தி படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. இந்நிலையில், அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் கேப்டன் மில்லர் படத்திற்கும் அதிகமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படங்களை தொடர்ந்து தனுஷ் தன்னுடைய இயக்கத்தில் டி50 படத்தை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இயக்குநர்
பவர் பாண்டி என்ற சிறப்பான படத்தை இயக்கியிருந்தார் நடிகர் தனுஷ். இந்தப் படத்தை தொடர்ந்து அவரது அடுத்தப்பட இயக்கம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிமாக காணப்பட்டது. இந்நிலையில் அவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் டி50 என்ற படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். மாறாக, இந்தப் படத்தில் அவர் கெஸ்ட் ரோலில்தான் நடிக்கவுள்ளதாகவும் ப பாண்டி படத்தை போல, இந்தப் படத்திலும் வேறொரு நடிகரை வைத்தே படத்தை கொடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











