ஓலை கொட்டகையில் பாடம் எடுக்கும் தனுஷ்.. வாத்தி படத்தின் புதிய போஸ்டர்!

சென்னை : நடிகர் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

திருச்சிற்றம்பலம் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சிறப்பான வரவேற்பையும் வசூலையும் குவித்தது.

தொடர்ந்து தனுஷ் தன்னுடைய சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் நடித்திருந்த நானே வருவேன் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்கள் கடந்த ஆண்டில் வெளியாகி அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படங்களில் திருச்சிற்றம்பலம் விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், அடுத்ததாக வெளியான நானே வருவேன் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

வாத்தி படம்

வாத்தி படம்

இதனிடையே அடுத்ததாக அவரது நடிப்பில் வாத்தி படம் பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்தப்படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப் போன நிலையில், பிப்ரவரி 17ம் தேதி படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் இசை வெளியீடு, வரும் பிப்ரவரி 4ம் தேதி நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் -தெலுங்கில் ரிலீஸ்

தமிழ் -தெலுங்கில் ரிலீஸ்

இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமான அளவில் நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லலீத்தின் செவன் ஸ்கிரின் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் மூலம் நேரடியாக தெலுங்கிலும் என்ட்ரி கொடுக்கவுள்ளார் தனுஷ். தெலுங்கில் சார் என்ற பெயரில் படம் ரிலீசாகவுள்ளது.

புதிய போஸ்டர்

புதிய போஸ்டர்

படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியானவண்ணம் உள்ள நிலையில், தற்போது குடியரசு தினத்தையொட்டி படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் சிறப்பான வகையில் தனுஷ் காணப்படுகிறார். தொடர்ந்து ஓலை கொட்டகையில் அவர் மாணவர்களுக்கு பாடம் எடுப்பதாகவும் போஸ்டரில் காணப்படுகிறது.

தனுஷ் 50வது படம்

தனுஷ் 50வது படம்

ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என சுற்றி சுற்றி படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். தற்போது டோலிவுட்டிலும் நேரடியாக சார் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 50வது படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X